முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கழிவுகளை சுத்தம் செய்ய மனிதர்களா..? இனி 2 ஆண்டுகள் ஜெயில் உறுதி..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி..!!

The District Collector has warned that if people are used to clean sewage in Namakkal, they will be punished with two years imprisonment.
09:26 AM Jun 19, 2024 IST | Chella
Advertisement

நாமக்கல்லில் கழிவுநீரை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

கைகளால் மலம் அள்ளும் பணித்தடை மற்றும் மறுவாழ்வளித்தல் சட்டம் -2013, படி தங்கள் வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் மற்றும் கழிவுநீர் பாதைக்குள் இறங்கி சுத்தம் செய்ய எந்தவொரு தனி நபரையும் நியமிப்பது சட்டவிரோதமானது. தண்டணைக்குரிய குற்றமாகும். ஒரு கட்டிடத்தில் செப்டிக் டேங்க் அல்லது கழிவு நீர் பாதை சுத்தம் செய்யும் போது அந்த நபர் மரணம் அடைந்தாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ கட்டிட உரிமையாளரே பொறுப்பாவார்.

சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தால் கட்டிட உரிமையாளர்/ வாடகைக்கு குடியிருப்போர்/ ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் கழிவுநீரை அகற்ற, சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வணிக நிறுவனங்கள், ஆலைகளில் கழிவுநீரை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ,ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

Read More : இன்று இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்..!!

Tags :
namakkalஅபராதம்கழிவுநீர்சிறை தண்டனை
Advertisement
Next Article