’பூமி மட்டுமல்ல இந்த கிரகத்திலும் மனிதர்கள் வாழலாம்’..!! விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு..!!
பூமியில் மனிதர்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ள நிலையில், இதேபோல் மற்றொரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, மனிதன் வாழ்வதற்கு வெள்ளி கிரகம் ஏற்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, சூரியனைச் சுற்றி வரும் கோள்கள் சூரிய குடும்பங்கள் என்று அழைக்கப்படுகிறது.
சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கோள்கள் வெளிப்புற கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, இவை எக்ஸோப்ளானெட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. இதுவரை விஞ்ஞானிகள் 5600 எக்ஸோப்ளானெட்டுகளை கண்டுபிடித்திருக்கின்றனர்.
மனிதன் வாழக்கூடிய புதிய கிரகத்தை கண்டுபிடித்து அதற்கு Gliese 12b என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர். இந்த கிரகம் சூரியனின் எடையில் 12 சதவீதம் மற்றும் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்டதாகும். திரவ நீரும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த கிரகத்தில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.