For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Shock: விலங்குகளுக்கு தொற்று பரவ மனித இனமே முதல் காரணம்!... அதிர்ச்சியளிக்கும் ஆய்வு!

08:26 AM Mar 30, 2024 IST | Kokila
shock  விலங்குகளுக்கு தொற்று பரவ மனித இனமே முதல் காரணம்     அதிர்ச்சியளிக்கும் ஆய்வு
Advertisement

Shock: விலங்குகளுக்கு ஏற்படும் தொற்றுகளுக்கு, பிற காரணிகளை விட, மனிதர்களே அதிகம் என்ற அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Advertisement

நேச்சர் எக்காலஜி & எவல்யூஷன் இதழில் (Nature Ecology & Evolution) வெளியாகியுள்ள ஆய்வு மற்றும் ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, விலங்குகளுக்கு நோய்த்தொற்று பரவுவதற்கு முக்கியமான காரணங்களில் பிற காரணங்கள் சுமார் 79 சதவீதம் என்றால், மீதமுள்ள 21 சதவீத தொற்றுகளுக்கு காரணம் மனிதர்கள் தான் என்று ஆய்வு கூறுகிறது. விலங்குகளுக்கு நோய்த்தொற்று பரப்புவதில் மனிதர்களுக்கு முதலிடம் என்ற அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின.

மனிதர்களைப் பாதித்த சில கொடிய நோய்கள் உண்மையில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்க்கிருமிகளிலிருந்து தோன்றியவை என்பது நிரூபிக்கப்பப்பட்ட உண்மை ஆகும். உதாரணமாக, எய்ட்ஸ் நோய் ஏற்படுத்தும் எச்.ஐ.வி வைரஸ் சிம்பன்சிகளிடமிருந்து தோன்றியது என்பதையும், அண்மையில் உலகையே உலுக்கி முடக்கிய கொரோனா,ம் COVID-19 வௌவால்களில் இருந்து மனிதர்களுக்குப் பரவியதாக நம்பப்படுகிறது.

பொதுவாக, விலங்குகளிடம் இருந்தே மனிதர்களுக்கு தொற்றுகள் பரவுகிறது என்ற பொதுவான நம்பிக்கையை தகர்க்கும் அண்மை ஆய்வு முடிவுகள், விலங்குகள் நமக்கு ஏற்படுத்தும் தொற்றுக்களைவிட, இரு மடங்கு மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு நோய் பரவுவதாக வெளிப்படுத்தியுள்ளது.

மில்லியன் கணக்கான வைரஸ் மரபணு வரிசைகளை பகுப்பாய்வு செய்த விஞ்ஞானிகள், மனிதர்கள் உண்மையில் விலங்குகளுக்கு அதிகமான வைரஸ்களை அனுப்புகிறார்கள் என்று கண்டறிந்தனர் என்ற ஆய்வு, நேச்சர் எக்காலஜி & எவல்யூஷன் இதழில் (Nature Ecology & Evolution) வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 12 மில்லியன் வைரஸ் மரபணுக்களை ஆய்வு செய்து, கிட்டத்தட்ட 3,000 வைரஸ்கள் இனங்கள் தொற்றியிருப்பதாக தெரியவந்துள்ளது.

பூனைகள் மற்றும் நாய்கள் போன்ற செல்லப்பிராணிகள், பன்றிகள், குதிரைகள் மற்றும் கால்நடைகள் போன்ற வளர்ப்பு விலங்குகள், கோழிகள் மற்றும் வாத்துகள் போன்ற பறவைகள், சிம்பன்சிகள், கொரில்லாக்கள், குரங்குகள் போன்ற விலங்குகள் உட்பட பல்வேறு விலங்கு இனங்களுக்கு மனிதர்கள் நோய்த்தொற்றுகளை ஏற்படுட்துகின்றானர். ரக்கூன்கள், கருப்பு-டஃப்ட் மார்மோசெட் மற்றும் ஆப்பிரிக்க மென்மையான-உரோம சுட்டி போன்ற பிற காட்டு விலங்குகளையும் மனிதர்கள் விட்டுவைக்கவில்லை.

"இது உண்மையில் சுற்றுச்சூழல் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் மீதான மனிதர்களின் மகத்தான தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது" என்று இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும், லண்டன் யூனிவர்சிட்டி காலேஜ் ஜெனிடிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் கணக்கீட்டு உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவருமான செட்ரிக் டான் தெரிவித்துள்ளார்.

மனிதர்களும் விலங்குகளும் எண்ணற்ற நுண்ணுயிரிகளை உருவாக்குகின்றானர், அவை நெருங்கிய தொடர்பு மூலம் மற்றொரு இனத்திற்கு செல்கின்றன. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன மற்றும் மீன் என முதுகெலும்பு உள்ள உயிரினங்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்டவரகளிடம் இருந்து வெளியாகும் திரவங்களுடனான நேரடி தொடர்பு, அல்லது மற்ற உயிரினங்களால் கடிக்கப்படுவது உட்பட, மனிதர்களுக்குப் பொருந்தும் அதே பரிமாற்ற முறைகள் மூலம் வைரஸ்கள் வெவ்வேறு உயிரினங்களுக்கு இடையில் பரவுகின்றன.

இருப்பினும், ஒரு வைரஸ் வேறொரு உயிரினத்திற்கு புகுவதற்கு முன், அதற்கான உயிரியல் கருவித்தொகுப்பைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது புதிய ஹோஸ்ட் இனங்களின் செல்களுக்குள் நுழைந்து அவற்றின் வளங்களை நோய்த்தொற்றுகள் மாற்றியமைக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக நோய்த்தொற்று என்பது, பல இனங்களுக்கு பரவுவது பொருத்தமற்றது என்றும், அவை அவசியமில்லை என்றாலும், "ஒரு வைரஸ் பரவத் தொடங்கியதும், நோய் வெடிப்பு, தொற்றுநோய் அல்லது ஒரு உள்ளூர் நோய்க்கிருமியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளலாம்." என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

Readmore: இயக்குனரின் ஆசை..!! வேண்டாம்னு விஜய் சொல்லியும் டேனியல் பாலாஜி செய்த விஷயம்..!!

Tags :
Advertisement