For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

2 மனித தலைகளை துண்டித்து நரபலி பூஜை..? நடிகர் பார்த்திபன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!!

04:14 PM Dec 04, 2023 IST | 1newsnationuser6
2 மனித தலைகளை துண்டித்து நரபலி பூஜை    நடிகர் பார்த்திபன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
Advertisement

இரண்டு மனித தலைகளை துண்டித்து நரபலி கொடுப்பது போன்ற ஒரு வீடியோவை இயக்குநர் பார்த்திபன் பகிர்ந்து, 'இது என்னவென்று தெரிந்தால் சொல்லுங்கள்' என்று ட்வீட் செய்துள்ளார்.

Advertisement

இரண்டு மனித தலைகளை துண்டித்து வாழை இலையில் வைத்து பூஜை செய்து கொண்டிருக்கும்படியான நரபலி வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ’இது என்னவென்று தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்! நானும் போலீசுக்கு தெரியப்படுத்தியுள்ளேன்' என கூறியுள்ளார்.

அந்த வீடியோவில், இரண்டு இளைஞர்களின் தலை துண்டாக வெட்டப்பட்டு பூஜையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த தலைகளின் பக்கத்திலேயே இருவரது சடலமும் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடக்கிறது. காளி வேடத்தில் ஒருவர் கையில் கத்தியோடு ஆடிக்கொண்டிருக்கிறார். சாமியார் ஒருவர் பூஜை செய்கிறார். இதனை பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிர்ச்சியளிக்கும் இந்த வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோவை காண: https://x.com/rparthiepan/status/1731556550408630740?s=20

Tags :
Advertisement