காதலிக்கும் போது கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது குற்றம் கிடையாது...! உயர் நீதிமன்றம் தீர்ப்பு
இளம் பருவத்தினர் காதலிக்கும் போது கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது குற்றமாகாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: 'மனுதாரர் 20 வயதானவர். அவரும் 19 வயது இளம் பெண் ஒருவரும் 2020ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2022 நவம்பர் மாதத்தில் இருவரும் நேரில் சந்தித்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மனுதாரர் இளம் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.
இளம் பெண் காதல் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மனுதாரரிடம் இளம் பெண் கூறியுள்ளார். மனுதாரர் திருமணத்துக்கு மறுத்துவிட்டார். அதன் பிறகே மனுதாரர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் மீது உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்தி, சித்திரவதை செய்வது அல்லது விரும்பத்தகாத, வெளிப்படையான பாலியல் தொந்தரவு செய்யும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனோ தாக்கல் செய்திருந்தார்; இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது; இளம் பருவத்தினர் காதலிக்கும் போது கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது குற்றமாகாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.