ஹவுரா ரயில் விபத்து : ஹெல்ப்லைன் நம்பரை வெளியிட்டது இரயில்வே அமைச்சகம்..!!
ஹவுரா-சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, ரயில்வே அமைச்சகம் ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர் அருகே ஹவுரா-சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை ராஜ்கர்சவான் மற்றும் படபாம்போ நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 18 பெட்டிகள் தடம் புரண்டதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கிட்டத்தட்ட 60 பேர் காயமடைந்தனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்பு குழுவினர் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரயில் தடம் புரண்டது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து, ரயில்வே அமைச்சகம் ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது. மீட்புப் பணிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், வணிகக் கட்டுப்பாடு டாடாநகர் (06572290324), சக்ரதர்பூர் (06587 238072), ரூர்கேலா (06612501072, 06612500244), ராஞ்சி (06512378711) மற்றும் 321432143687114205 ), HWH உதவி மையத்தின் ஹெல்ப்லைன் எண்கள்: 033-26382217, 9433357920, SHM ஹெல்ப் டெஸ்க்: 6295531471, 7595074427, KGP உதவி மையம்: 03222-293764, No3CSMT590 0, மும்பை: 022-22694040 மற்றும் நாக்பூர்: 7757912790 ஆகிய எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
Read more ; இந்த நாட்டு மக்கள் உலகிலேயே மிக உயரமானவர்கள்!. ஒவ்வொருவரின் சராசரி உயரம் என்ன தெரியுமா?