For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சென்னையில் அடுத்த ஒருவாரம் எப்படி இருக்கும்..? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்..!!

07:13 AM Apr 10, 2024 IST | Chella
சென்னையில் அடுத்த ஒருவாரம் எப்படி இருக்கும்    தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்
Advertisement

சென்னையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. சென்னையில் ஏற்பட்ட கோடை காலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த வருடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில், உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் வெப்பநிலை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

இந்நிலையில்தான், தமிழ்நாட்டில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், சராசரி வெப்பத்தை விட இன்று 2 டிகிரி குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டில் நேற்று அதிக வெப்பமான நாட்களில் ஒன்றாகும். நேற்று 39 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை கடந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நேற்றை விட இன்று வெப்பம் அதிகமாக இருக்கும். நேற்று மீனம்பாக்கம் மாநிலத்தில் வெப்பம் அதிகமாக இருந்தது. இன்றும் அதைவிட அதிக வெப்பநிலையுடன் மீனம்பாக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது. புறநகர்ப் பகுதிகளில் 40 C ஐ தொட கூட வாய்ப்பு உள்ளது. உண்மையான கத்ரி வெயில் இன்னும் தொடங்கவில்லை. ஆனால், இன்று முதல் கொஞ்சம் கொஞ்சமாக வெப்பம் குறையும் என்று வானிலை ஆய்வு மைய தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு காற்று வருவதற்கான காலம் நெருங்கிவிட்டது. இதனால் வரும் நாட்களில் வெயில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக வெயில் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, மதுரை, வேலூர், தஞ்சை, திருச்சி, நெல்லை, நாமக்கல்லில் முதல் கட்டமாக வெயில் குறைவாக இருக்கும்.

இதற்கிடையே, சென்னையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், அடுத்த ஒரு வாரத்தில் சென்னை மாநகரில் இயல்பான வெப்பநிலை முதல் இயல்பை விட குறைவான வெப்பநிலையே இருக்கும். கிழக்கு காற்று காரணமாக ஏற்படும் வெப்பநிலை மாற்றத்திற்கு நன்றி. கொங்கு/உள் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறையும் மற்றும் 40-41 C ஆக இருந்த இடங்களில் வெப்பநிலை 37/39 C ஆக பதிவாகும். தேர்தல் முடியும் வரை தமிழகத்தில் வெப்ப அலைக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Read More : ”மலைகளை குடைந்து தான் சாலைகள் அமைக்க வேண்டுமா”..? சீமான் பாய்ச்சல்..!!

Advertisement