For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கணவன்-மனைவி இடையே தகராறு இருந்தால் பாலியல் ஆசைகள் எப்படி நிறைவேறும்? - அலகாபாத் உயர்நீதிமன்றம்

How will spouses satisfy sexual urges if not from each other? Allahabad High Court junks cruelty case
10:40 AM Oct 11, 2024 IST | Mari Thangam
கணவன் மனைவி இடையே தகராறு இருந்தால் பாலியல் ஆசைகள் எப்படி நிறைவேறும்    அலகாபாத் உயர்நீதிமன்றம்
Advertisement

கணவர் மீது மனைவி சுமத்திய வரதட்சணை துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை அகமதாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருவருக்கும் 2015ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக புகார் அளித்தார். அந்த புகாரில், கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும், இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு தொடர்ந்து வற்புறுத்துவதாகவும், ஆபாசமான படங்களைப் பார்த்து, தன் முன் நிர்வாணமாகச் சுற்றியதாகவும் கூறியிருந்தார், மேலும் இதனை கண்டித்த போது, தன்னை கொலை செய்ய முயன்றதாகவும் மனு அளித்த பெண் குற்றம் சாட்டினார் .

Advertisement

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் பேரில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 498ஏ, 323, 504, 506, 509 மற்றும் வரதட்சணைத் தடைச் சட்டம் 3 மற்றும் 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணையின் போது, ​​மனைவியின் குற்றச்சாட்டுகள் பொதுவானவை மற்றும் தெளிவற்றவை என்றும் அவரது கூற்றுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் அலகாபாத் நீதிமன்றம் கூறியது.

மனைவிக்கு உடல் ரீதியான காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த வழக்கின் உண்மைகளிலிருந்து இது 498-A பிரிவின் கீழ் கொடூரமான வழக்கு என்று கூறுவது தவறானது. கணவன்-மனைவி இடையே தகராறு இருந்தால் பாலியல் ஆசைகள் எப்படி நிறைவேறும் என கூறிய நீதிபதி இறுதியில் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து தனிப்பட்ட வாழ்க்கையின் முக்கிய அங்கமாகக் கருதப்படும் பாலியல் திருப்தி மற்றும் திருமணம் குறித்து சமூகத்தில் ஒரு புதிய விவாதம் தொடங்கியுள்ளது.

Read more ; கம்ப்யூட்டர், செல்போனில் வேலை பார்க்குறீங்களா..? இந்த நோய் பற்றி தெரியுமா..? கண்களுக்கு ஆபத்து..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

Tags :
Advertisement