மாணவி பாலியல் துன்புறுத்தப்பட்டது எப்படி..? சென்னை ஐஐடி பரபரப்பு விளக்கம்..!! மாணவ - மாணவிகளுக்கும் முக்கிய அறிவுரை..!!
நாட்டில் உள்ள மிக உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்று சென்னை ஐஐடி. இங்கு ஏராளமான மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கிண்டியில் அமைந்துள்ள ஐஐடியில் ஆராய்ச்சி கல்வி படித்து வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி ஒருவர், கேண்டீனில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியிடம் கேண்டீனில் பணியாற்றி வந்த வடமாநில இளைஞர் ஸ்ரீராம் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து, மாணவி உடனடியாக புகாரளித்துள்ளார். இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீராமை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தின் அதிர்வலைகளே இன்னும் விலகாத நிலையில், ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐஐடி நிர்வாகம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், ஜனவரி 14 (நேற்று) மாலை 5.30 மணியளவில் வேளச்சேரி - தரமணி சாலையில் உள்ள தேனீர் கடையில் ஐஐடி ஆராய்ச்சி மாணவி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் ஆண் நண்பர்கள், தொல்லை கொடுத்த நபரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். ஐஐடி வளாகத்திற்கு வெளியே உள்ள தேனீர் கடையில் சம்பவம் நடைபெற்றது.
குற்றம்சாட்டப்பட்ட நபருக்கும் ஐஐடியுடன் எந்த தொடர்பும் இல்லை. ஐஐடி வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. வளாகத்திற்குள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவ - மாணவிகள் வளாகத்தை விட்டு வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More : தமிழ்நாட்டில் மீண்டும் வெளுத்து வாங்கப் போகும் கனமழை..!! 18, 19ஆம் தேதிகளில் சம்பவம் இருக்கு..!!