ஒரே மாதத்தில் உடல் எடை குறைய வைக்கும் தேங்காய் எண்ணெய்.! இப்படி பயன்படுத்தி பாருங்கள்.!?
பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரும் உடல் எடையை குறைப்பதற்காக பல விதமான மருந்துகளையும், உணவு முறைகளையும், டயட் முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். ஆனால் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் உபயோகப்படுத்துவதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அவை எப்படி என்பதை குறித்து பார்க்கலாம்?
தேங்காய் எண்ணெய் நம் முடி மற்றும் சருமத்திற்கு பல்வேறு வகையான நன்மைகளை செய்து வருகிறது. உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும் பல ஊட்டச்சத்துக்கள் தேங்காய் எண்ணெயில் நிறைந்துள்ளது. தேங்காய் எண்ணெய் அதிக கொழுப்பு நிறைந்தது. இதை உணவாக பயன்படுத்தி வந்தால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும் என்று பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதில் உண்மை இல்லை.
மற்ற எண்ணெய்களை விட இயற்கையாக கிடைக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி உணவு சமைக்கும்போது உடலில் நோய் பாதிப்புகள் குறைகின்றன. இதில் ட்ரைகிளைசரைடு என்ற வேதிப்பொருள் நிறைந்திருப்பதால் இது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை பிரித்து எடுத்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.
தினமும் காலையில் எழுந்து பல் துலக்கிய பின்பு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால் வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. தேங்காய் எண்ணெயில் செய்யப்பட்ட உணவை உண்பதன் மூலம் பசியை கட்டுப்படுத்துகிறது. நீண்ட நேரம் பசிக்காமல் இருக்க செய்கிறது. தேங்காய் எண்ணெய் அடிக்கடி உபயோகப்படுத்தி வந்தால் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து இதயத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.