For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரயில்வே ஸ்டேஷனில் கடை துவங்குவது எப்படி..? ஈசியா பணம் சம்பாதிக்கலாம்..!! சூப்பர் ஐடியா..?

04:42 PM Nov 12, 2023 IST | 1newsnationuser6
ரயில்வே ஸ்டேஷனில் கடை துவங்குவது எப்படி    ஈசியா பணம் சம்பாதிக்கலாம்     சூப்பர் ஐடியா
Advertisement

உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கான இந்தியன் ரயில்வே மக்களுக்கு பல்வேறு விதமான வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ரயில்வே ஸ்டேஷன்களில் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் வந்து செல்வதால் தொழில் துவங்குவதற்கு ரயில்வே ஸ்டேஷன் ஒரு அற்புதமான இடமாகும். டீ, காபி, உணவு, பாட்டில் தண்ணீர், புத்தகங்கள், பொம்மைகள், நியூஸ் பேப்பர் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் கடையை துவங்குவதன் மூலமாக நிலையான ஒரு வருமானத்தை பெறலாம்.

Advertisement

ரயில்வே பிளாட்ஃபார்ம்களில் எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். அங்கு தொழில் செய்யும் நபர்களுக்கு கஸ்டமர்கள் கிடைப்பதில் நிச்சயமாக எந்த ஒரு சிரமமும் இருக்காது. எந்த ஒரு சீசனாக இருந்தாலும் சரி, ரயில்வே ஸ்டேஷனில் கடை வைத்திருப்பவர்களுக்கு லாபம் வந்து கொண்டே இருக்கும். எனவே, ஒட்டு மொத்தமாக ரயில்வே ஸ்டேஷனில் கடை திறப்பது என்பது ஒரு அற்புதமான தொழில் வாய்ப்பு.

ரயில்வே ஸ்டேஷனில் ஒரு கடையை திறப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

ரயில்வே பிளாட்ஃபார்ம்களில் கடைகள் திறப்பதற்கான டெண்டர்களை இந்தியன் ரயில்வே வழக்கமான முறையில் வெளியிடும். இது போன்ற டெண்டர்களை நீங்கள் IRCTC போர்ட்டலில் காணலாம். நீங்கள் என்ன மாதிரியான கடையை திறக்க விரும்புகிறீர்கள் என்பது உள்ளிட்ட விவரங்களுடன் டெண்டரை நிரப்ப வேண்டும். டெண்டர் உங்களுக்கு கிடைத்துவிட்டால், நீங்கள் தாராளமாக குறிப்பிட்ட அந்த ரயில்வே ஸ்டேஷனில் கடையை திறக்கலாம்.

புத்தகங்கள், டீ, உணவு, நியூஸ் பேப்பர், பாட்டில் வாட்டர் மற்றும் பொம்மைகள் போன்ற பல்வேறு விதமான பொருட்களை விற்பனை செய்யக்கூடிய எந்த ஒரு கடையையும் நீங்கள் தேர்வு செய்யலாம். உங்கள் கடை அமைந்திருக்கக்கூடிய இடம் மற்றும் அளவை பொறுத்து நீங்கள் ரயில்வேக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்தத் தொகை 30,000 ரூபாயில் இருந்து 40,000 ரூபாய் வரை வேறுபடலாம்.

டெண்டர்களுக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

ஒருவேளை ரயில்வே ஸ்டேஷனில் கடை திறப்பதற்கான எண்ணம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் அவ்வப்போது டெண்டர் வெளியாகியுள்ளதா? என்பதை IRCTC வெப்சைட்டை பார்வையிடுவதன் மூலமாக தெரிந்து கொள்ளலாம். டெண்டர் வெளியிட்ட தகவல் உங்களுக்கு தெரிந்தால் நேரடியாக நீங்கள் ரயில்வே துறையின் சோனல் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ரயில்வே டெண்டர்களுக்கு விண்ணப்பிக்க உங்களிடம் வாக்காளர் அட்டை, பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு போன்றவை இருக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து ரயில்வே உங்களது விண்ணப்பத்தை விரைவில் பரிசீலனை செய்வார்கள். தேவையான தகுதி வரம்புகளை விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பட்சத்தில் உங்களுக்கான டெண்டர் வெரிஃபை செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும். டெண்டர் உங்களுக்கு வழங்கப்பட்டதும் நீங்கள் ரயில்வே பிளாட்ஃபார்மில் கடை திறந்து தொழில் துவங்க ஆரம்பிக்கலாம். இந்த டெண்டர் 5 வருடத்திற்கு செல்லுபடி ஆகும்.

பெரிய அளவில் லாபம் ஈட்டுவது எப்படி..?

ரயில்வே ஸ்டேஷனில் கடை திறப்பது என்பது நிச்சயமாக லாபம் தரக்கூடிய ஒரு தொழிலாக இருக்கும். சந்தை குறித்த ஆய்வுகளை தீவிரமாக செய்து, நன்கு திட்டமிட்ட ஒரு தொழில் யுக்தியை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் நிச்சயமாக பல மில்லியன் ரூபாய் லாபத்தை எதிர்பார்க்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்களது கடையின் வகை மற்றும் அமைந்திருக்கக் கூடிய இடத்தை மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். கிஃப்ட் ஷாப், ஃபுட் சர்வீசஸ், என்டர்டெயின்மென்ட் ப்ராடக்டுகள், கன்வீனியன்ஸ் ஸ்டோர் போன்ற பிசினஸ்களை சரியான இடத்தில் ஆரம்பிப்பது உங்களுக்கு நிச்சயமாக மில்லியன் கணக்கான பணத்தை சம்பாதித்து தரும்.

Tags :
Advertisement