முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஈசியாக குறைக்க வேண்டுமா.! கற்றாழையை இப்படி சாப்பிடுங்க போதும்.!?

07:43 AM Jan 25, 2024 IST | 1newsnationuser5
Advertisement

சாதாரணமாக பல இடங்களில் வளரும் கற்றாழையில் மருத்துவ குணம் அதிகமாக உள்ளது. கற்றாழை சருமத்தை பொலிவானதாகவும், உடலை ஆரோக்கியப்படுத்துவதற்கும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. அழகை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் உடலில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களையும் குணப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது.

Advertisement

கற்றாழையை பயன்படுத்தும் முறை
கற்றாழையின் ஒரு பகுதியை மட்டும் நன்றாக கழுவி விட்டு பத்து நிமிடத்திற்கு அப்படியே வைத்து விட வேண்டும். வெட்டிய பாகத்திலிருந்து மஞ்சள் நிறத்தில் திரவம் முழுவதுமாக வெளியேறும். இந்த மஞ்சள் நிற திரவம் உடலுக்கு ஏற்றதல்ல. இது முழுவதுமாக வெளியேறிய பின்பு கற்றாழையின் தோலை நீக்கி உள்ளிருக்கும் ஜெல் போன்ற பகுதியை தனியாக வெட்டி எடுத்து உபயோகப்படுத்தலாம்.

நீரிழிவு நோயை குறைக்கும் கற்றாழை
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு அவ்வப்போது இந்த கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற பகுதியை ஜூஸ் போன்று செய்து குடித்து வரலாம். நீரிழிவு நோய் வந்த பின்னரும் இந்த சாறை குடித்து வருவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இது மட்டுமல்லாது மேலும் ஒரு சில நோய்களை குணப்படுத்தும்.

கற்றாழை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் புளிப்பு ஏப்பம், நெஞ்செரிச்சல், வயிறு எரிச்சலுடன் இருப்பது போன்ற பிரச்சனைகளையும் கற்றாழை சரிசெய்கிறது. மங்கலான பார்வை, கண்ணில் புரை, கண் அழுத்தம் போன்ற கண் சம்பந்தப்பட்ட நோய்களையும் தீர்க்கிறது. இவ்வாறு பல்வேறு நோய்களையும் கற்றாழை குணப்படுத்துகிறது. ஆனால் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல்  கற்றாழையை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
aloe verahealthySugar Disease
Advertisement
Next Article