உடல் எடையை குறைத்தாலும் தொப்பையை குறைக்க முடியவில்லையா.? இதை பண்ணுங்க போதும்.!?
தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது பலருக்கும் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. உடல் எடையை குறைப்பதற்கு உணவு முறைகளிலும், உடற்பயிற்சி முறைகளிலும் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் உடல் எடையை குறைத்தாலும், தொப்பை குறையவில்லை என்பது பலருக்கும் கவலையாகவே உள்ளது.
வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரிப்பதற்கு, துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதற்கு மற்றொரு காரணமாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது. தற்போது பலரும் வேலையின் காரணமாக நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கின்றனர். இவ்வாறு செய்யும்போது நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்பு வயிற்றில் தேங்கி விடுகிறது.
இவ்வாறு வயிற்றில் தேங்கும் கொழுப்பை சரி செய்வதற்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாவிட்டால் தொப்பையில் உள்ள கொழுப்பு குறையாது. மேலும் அதிகமாக சர்க்கரை சேர்த்து காபி, டீ அருந்துவது, குளிர் பானங்கள் அருந்துவதை நிறுத்த வேண்டும்.
நாம் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டுகளுடன் இருந்தாலும் அதிகமாக மது அருந்தினால் அது பயனளிக்காது. குறிப்பாக உடற்பயிற்சி செய்யும் போது வயிற்றுப் பகுதிக்கான உடற்பயிற்சி தனியாக 30 நிமிடங்களுக்கு செய்து வருவதன் மூலம் வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பு ஒரே வாரத்தில் குறையும் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.