சிகரெட் பழக்கத்தை உடனே நிறுத்த வேண்டுமா.? இதை ட்ரை பண்ணுங்க போதும்.!?
புகை பிடிக்கும் பழக்கம் உடலுக்கு எவ்வளவு கேடு என்பது அனைவரும் அறிந்ததே. இது புகைப்பிடிப்பவருக்கு மட்டுமல்லாமல் அந்த புகையை சுவாசிக்கும் நபர்களுக்கும் உடலில் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்துகிறது. புகை பிடிப்பது உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக மாறிவிடுகிறது.
"புகைப்பிடிப்பது உயிருக்கு கேடு" என்று தெரிந்தும் தற்போது உள்ள காலகட்டத்தில் ஆண்களும், பெண்களும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று பலர் நினைத்தாலும் ஒரு சிலரால் மட்டுமே இந்த பழக்கத்தை கைவிட முடிகிறது. புகையிலையில் உள்ள நிக்கோட்டின் நம்மை புகைப்பிடிப்பதற்கு அடிமையாக்கி அதிலிருந்து வெளியே வரவிடாமல் செய்கிறது. புகைப்பிடிப்பதை ஒரு சில விஷயங்களை செய்வதன் மூலம் எளிதாக நிறுத்தலாம். அவை என்னென்ன தெரியுமா?
1. மனக்கட்டுப்பாடு - புகை பிடிப்பதை நிறுத்துவதற்கு பல விஷயங்கள் செய்தாலும் முதலில் மனக்கட்டுப்பாடு முக்கியம்.
2. சுயமரியாதை - புகைபிடிப்பதன் மூலம் நாம் சமுதாயத்தில் மரியாதையை இழக்கிறோம். மற்றவர்களை விட நம்மை குறித்த மரியாதை நமக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
3. புகைப்பிடிப்பதை நிறுத்திய பின் புகையிலையை நம் மனது அடிக்கடி நினைவூட்டும். அந்த நேரத்தில் மனதை திசை திருப்புவதன் மூலம் புகை பிடிப்பதை கட்டுப்படுத்தலாம்.
4. புகை பிடிக்க தோன்றும் நேரத்தில் காபி, டார்க் சாக்லேட், சூயிங்கம் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் இந்த பழக்கத்தை தடுக்கலாம்.
5. ரத்தத்தில் நிக்கோட்டின் அளவு அதிகமாக இருந்தால் புகை பிடிப்பதை அடிக்கடி மூளைக்கு நினைவூட்டும். இதற்கு ரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுகளை உண்ணலாம்.
6. உங்களை நீங்களே பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள். புகைப்பிடிக்க தோன்றும் நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.
இவ்வாறு மேலே குறிப்பிட்ட ஒரு சில விஷயங்களை செய்வதன் மூலம் புகை பிடிப்பதில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, சுற்றுச்சூழலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று வல்லுனர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.