For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குளிர்காலத்தில் இந்த விஷயங்களை எல்லாம் மறக்காமல் பண்ணுங்க.!? என்ன தெரியுமா.?

06:35 AM Jan 15, 2024 IST | 1newsnationuser5
குளிர்காலத்தில் இந்த விஷயங்களை எல்லாம் மறக்காமல் பண்ணுங்க    என்ன தெரியுமா
Advertisement

பொதுவாக குளிர் காலத்தில் பலருக்கும் நோய் பாதிப்பு அதிகமாகி தொடர்ந்து நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பது தான். குளிர்காலத்தில்  ஒரு சில விஷயங்களை செய்வதன் மூலம் நோய் நொடி இல்லாமல் இருக்கலாம். அவை என்னனென்ன என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க?

Advertisement

1. குளிர்காலத்தில் வீட்டில் சமைத்த சூடான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். ககண்டிப்பாக வெளியே வாங்கிய உணவுகளை உண்ணக்கூடாது.
2. குளிக்கும்போது வெதுவெதுப்பான நீரில் மட்டுமே குளிக்க வேண்டும். இது உடலில் இறந்த செல்களை நீக்கி புது செல்கள் வளர உதவி செய்யும்.
3. சைனஸ், ஆஸ்துமா மற்றும் சளி தொந்தரவுகள் இருப்பவர்கள் இஞ்சி, மஞ்சள் தூள், மிளகுத்தூள், தேன் கலந்த குடிநீரை குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
4. சுத்தம் சோறு போடும் என்ற பழமொழிக்கேற்ப குளிர்காலத்திலும் தினமும் குளித்து சுத்தமான ஆடைகளையே அணிவது நம் உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்.
5. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் வயதானவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சில தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம்.
6. குளிர்காலத்தில் அதிக காரமாகவோ அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகளையோ எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இது செரிமானத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள பழங்களையும், காய்கறிகளையும் தினமும் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
8. குளிர்காலத்தில் தொண்டைக்கு இதமாக சூப் வகைகள், கிரீன் டீ, இஞ்சி டீ, ரசம் வகைகள் போன்றவற்றை வைத்து சாப்பிடலாம்.
9. குளிருக்கு இதமாக காபி, டீ அதிகமாக அருந்துவதற்கு பதில் சத்துமாவில் கஞ்சி செய்து குடித்து வரலாம்.
10. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வீட்டில் கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை மட்டுமே குடிக்க கொடுத்து விட வேண்டும்.
இவ்வாறு ஒரு சில செயல்களை செய்வதன் மூலம் குளிர்காலத்தில் நோயின்றி வாழலாம்.

Tags :
Advertisement