காலை உணவை தவிர்த்தால் எடை அதிகரிக்குமா..? எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
நாம் உண்ணும் உணவில் காலை உணவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.காலை உணவை சத்தானதாக எடுத்துக் கொண்டால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், விரைந்தும் செயல்படலாம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலை வேளையில் உணவை எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்து வருவார்கள். ஆனால் இப்படி இருப்பது உடல் எடையை மேலும் அதிகரிப்பதோடு, ஆற்றல் இல்லாமல் சோர்வாக இருக்கவும் செய்கிறது.
ஒரு சில உணவுகளை காலையில் எடுத்துக் கொண்டால் சத்து நிறைந்ததாகவும், உடல் எடையை குறைக்கவும் பயன்படும். அவை என்னென்ன பார்க்கலாம் வாங்க?
1. அவல் - இதனை உப்புமா போன்று சமைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம். அவல் அந்த நாளுக்குரிய ஆற்றலையும், சுறுசுறுப்பையும் தருகிறது. மேலும் உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
2. முட்டை - 2 அல்லது 3 முட்டையை வேகவைத்தும் ஆம்லெட் போன்று செய்தும் காலை உணவாக எடுத்துக் கொண்டால் வயிறு நிரம்புவதுடன் நீண்ட நேரம் பசியும் எடுக்காது.
3. பாசிப்பருப்பு மற்றும் பச்சைப் பயிறு தோசை - இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் வலுப்பெறும். உடல் எடையையும் குறைக்கும்.
இவ்வாறு அன்றாடம் எடுத்துக் கொள்ளும் காலை உணவை சத்தானதாக எடுத்துக் கொண்டால் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாக வாழலாம்.