முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சௌசௌ காயில் சட்னி இப்படி செய்து பாருங்க.? உடனே காலியாகிடும்.!?

06:59 AM Jan 08, 2024 IST | 1newsnationuser5
Advertisement

சௌசௌ காய் சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காது. குறிப்பாக குழந்தைகளை இந்த காயை சாப்பிட வைப்பது மிகவும் கஷ்டம். ஆனால் சௌசௌ காய் சாப்பிடுவதன் மூலம் தலை முதல் கால் வரை ஏராளமான சத்துக்கள் கிடைக்கின்றது .

Advertisement

சௌசௌ காயில்  இந்த மாதிரி சட்னி செய்து கொடுத்தால் சாப்பிடாதவர்களையும் சாப்பிட வைக்கலாம். தேவையான பொருட்கள்: சௌசௌ- 1, சின்ன வெங்காயம் - 20, தேங்காய் - அரை மூடி, பொட்டு கடலை - கால் கப், கருவேப்பிலை - சிறிதளவு, வரமிளகாய் -3, புளி - நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.

முதலில் சௌசௌ காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சௌசௌ காய், சின்ன வெங்காயம், வர மிளகாய், கருவேப்பிலை, புளி, பொட்டுக்கடலை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

சௌசௌ காயில் இருக்கும் நீர் இறங்கிய பின் தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு இதனை ஆற வைத்து மிக்ஸியில் எடுத்து அரைத்தால் சுவையான குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு பிடித்தமான சௌசௌ சட்னி தயார்.

Tags :
Chutney receipeLifestylevegetablesசௌசௌ சட்னி
Advertisement
Next Article