பற்களில் உள்ள கறை நீங்கி முத்து போல் ஜொலிக்க இதை பண்ணுங்க போதும்.!?
பலருக்கும் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கி ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். பற்கள் உறுதியாக இருப்பதற்கு கால்சியம் மிக முக்கியமான ஊட்டச்சத்தாக கருதப்படுகிறது. எனவே நாம் உண்ணும் உணவில் கால்சியம் சத்து நிறைந்த உணவு பொருட்களை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் அல்லது மவுத் பிரஷ்ணர் வைத்து வாய் கொப்பளித்து விட வேண்டும். காலை, இரவு என இரண்டு வேளையும் பற்களை சுத்தமாக துலக்க வேண்டும். எந்த பேஸ்ட் உபயோகப்படுத்தலாம் என்பது பலருக்கும் குழப்பமாகவே இருந்து வருகிறது. எந்த வகையான பேஸ்ட் உபயோகப்படுத்துவது பற்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் என்பது குறித்து பார்க்கலாம்
இந்நிலையில் புளோரைடு என்ற வேதிப்பொருள் பற்களுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து மஞ்சள் நிற கரையையும் நீக்குகிறது. பற்களுக்கு தேவையான முக்கியமான மினரல்களில் ஒன்று தான் இந்த புளுரைடு ஆகும். ஒரு சில உணவு பொருட்களிலும், தண்ணீரிலும் இந்த புளோரைடு நிறைந்துள்ளது. மேலும் இந்த மினரல் இருக்கும் பற்பசைகளை வாங்கி உபயோகபடுத்தினால் பற்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கறையையும் நீக்குகிறது.
மேலும் இந்த புளோரைடு மினரல் உள்ள டூத் பேஸ்ட்டை பயன்படுத்தும் போது பற்கள் சிதைந்து போகாமல் பாதுகாக்கிறது. பற்களில் சொத்தைகள் ஏற்படாமல் தடுத்து வலிமை மிக்கதாக மாற்றுகிறது. மேலும் பற்கூச்சம், ஈருகளில் இருந்து இரத்தக் கசிவையும் இந்த வகையான டூத் பேஸ்ட்கள் தடுக்கின்றன.