முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குலதெய்வத்தை எந்த முறையில் நம் வீட்டிற்குள் அழைப்பது..? என்ன பூஜை செய்ய வேண்டும்..?

How to feel that our family deity has come and settled in our house puja room? In this post, we will see how to invite the family deity into our home.
05:20 AM Jun 13, 2024 IST | Chella
Advertisement

நாம் வணங்கக்கூடிய இறைவன் என்பவன் ஆத்மார்த்தமாக ஒளி வடிவமாக இருப்பவன் தான். உருவமில்லாத இறைவனுக்கு ஒவ்வொரு வடிவத்தினை கொடுத்து வணங்கி வருகிறோம். ஆனால், உருவமே இல்லாத இறைவனின் வருகையை நம்மால் சில அறிகுறிகளை வைத்து உணர முடியும். சில அறிகுறிகள், சில வாசத்தை வைத்து நம்மால் நிச்சயம் உணர முடியும். அந்த வரிசையில், நம் வீட்டு பூஜை அறையில் நம் வீட்டு குல தெய்வம் வந்து குடியேறியதை எப்படி உணர்வது? வாசலில் நின்று இருக்கும் நம் வீட்டு குலதெய்வத்தை எந்த முறையில் நம் வீட்டிற்குள் அழைப்பது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

குலதெய்வ பூஜை செய்வதற்கு முன்பு வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் வீட்டு குல தெய்வம் எதுவோ, அந்த தெய்வத்திற்கு உகந்த கிழமையில் இந்த பூஜையை செய்யலாம். காலையில் எழுந்து குளித்துவிட வேண்டும். பூஜை அறையில் இருக்கும் குலதெய்வத்தின் படத்திற்கு முன்பாக ஒரு சொம்பில் தண்ணீரையும், ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தனியாக ஒரு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பின்பு ஒரு பித்தளை தாம்பாளத்தில் பச்சரிசியைப் பரப்பி, அதன் மேல் ஒரு பித்தளை சொம்பு வைக்க வேண்டும். சொம்பு நிரம்ப நல்ல தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சளை கலந்து விட வேண்டும். அதனுள் ஒரு எலுமிச்சம் பழத்தையும் போட்டு விடுங்கள்.

இந்த தண்ணீரில் வாசத்திற்காக ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது நமக்கு கலச சொம்பு தயாராக உள்ளது. இந்த சொம்பின் முன்பாக நீங்கள் அமர்ந்து கொண்டு உங்களது குல தெய்வத்தின் நாமத்தை 108 முறை உச்சரித்து, குலதெய்வம் வீட்டிற்குள் வர வேண்டும் என்று அழைக்க வேண்டும். இப்படி கலச சொம்பு நிறுத்தி உங்கள் குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்தால், உங்கள் குலதெய்வம் அந்த கலச சொம்பில் வந்து இறங்கிவிடும்.

உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்தவித காற்றும் வீசாது. அதேசமயம் அந்த கலச சொம்பை நீங்கள் அசைத்து இருக்க மாட்டீர்கள். ஆனால், சொம்பில் இருக்கும் தண்ணீரில் எதிர்பாராத சமயத்தில் நீங்கள் மந்திரத்தை உச்சரிக்கும் போது, அசைவு ஏற்படும். அந்த அசைவே குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வந்துவிட்டது என்பதை உணர்த்தும். (குலதெய்வமே தெரியாதவர்கள், தெரியாத குலதெய்வத்தை நினைத்து ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்லியும் இந்த பூஜையை செய்து, தெரியாத குலதெய்வத்தை அழைக்கலாம்.)

ஒருவேளை உங்களுடைய பூஜையில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடக்கவில்லை, தண்ணீரில் எந்த அசைவும் தெரியவில்லை என்றால் குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வரவில்லை. இன்னமும் கோபத்தோடு இருக்கிறது என்பதை குறிப்பதாகும். சரி இதற்கு பரிகாரமாக என்ன செய்வது என்பதையும் பார்ப்போம்.

உங்கள் பூஜை அறையில் 48 நாட்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து, குலதெய்வத்தின் திருவுருவப் படத்திற்கு முன்பாக ஒரு மண் அகல் தீபத்தை ஏற்றி வைத்து, ‘குலதெய்வம் மனம் இறங்கி வீட்டிற்கு வர வேண்டும்’ என்ற வார்த்தையை 3 முறை உச்சரித்து, தொடர்ந்து குலதெய்வத்தை வழிபட வேண்டும். 48 நாட்களுக்கு பிறகு மீண்டும் மேல் சொன்ன படி கலச சொம்பு நிறுத்தி உங்களுடைய பூஜையை செய்து பாருங்கள். நிச்சயமாக குலதெய்வம் உங்கள் குடும்பத்திற்கு அருளாசி வழங்க உங்கள் வீடு தேடி வரும்.

Read More : அம்பானி குடும்பத்தினர் குடிக்கும் அரியவகை பால்..!! ஒரு லிட்டர் இவ்வளவா..? அப்படி என்ன ஸ்பெஷல்..?

Tags :
FeelgodhomePoojai
Advertisement
Next Article