சந்தையில் வலம் வரும் போலி பனீர்.. உடல் நலத்துக்கு இவ்வளவு ஆபத்தா? எப்படி அடையாளம் காண்பது..?
யாருக்குத்தான் பனீர் பிடிக்காது? குறிப்பாக குழந்தைகள் பனீர் மற்றும் அதிலிருந்து செய்யப்படும் உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இன்றைய காலகட்டத்தில் போலி பனீர் சந்தையில் எளிதில் கிடைப்பதற்கு இதுவே காரணம். உண்மையான பனீரின் விலை அதிகம் என்பதால் கடைகளில் கிடைக்கும் பனீர் பெரும்பாலும் போலியானதாகவே இருக்கும். இதை சாப்பிடுவது உயிருக்கு ஆபத்தானது. மேலும் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அனலாக் பனீர் செயற்கை பனீர் என்றும் அழைக்கப்படுகிறது. இது கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த போலி பனீரில் பொதுவாக பாலுக்கு பதிலாக காய்கறி கொழுப்பு மற்றும் ஸ்டார்ச் போன்ற பொருட்கள் இருக்கும். இதில் பால் கொழுப்பு காய்கறி கொழுப்புடன் மாற்றப்படுகிறது. உணவகங்கள் அனலாக் பனீரை முக்கியமாக அதன் குறைந்த விலை காரணமாக பயன்படுத்துகின்றன. உண்மையான பனீர் ஒரு கிலோவுக்கு சுமார் ரூ.450, போலி பன்னீர் கடைகளுஇல் 200 ரூபாய்க்கு கிடைக்கிறது.
கலப்படம் செய்யப்பட்ட பனீரை கண்டறிவது எப்படி?
பிரஷர் டெஸ்ட் : பனீரை ஒரு தட்டில் வைத்து, மிக லேசான அழுத்தத்துடன் உங்கள் உள்ளங்கையை வைத்து நசுக்க முயற்சிக்கவும். அப்போது பனீர் பிரிந்து வந்தால் அல்லது உடைந்தால், அதில் கலப்படம் இல்லை என்று அர்த்தம். இல்லாவிட்டால் அதில் கலப்படம் செய்யப்பட்டதற்கு வாயுப்பு உள்ளது. உண்மையில், போலி பனீரில் காணப்படும் பொருட்கள் பாலின் குணங்களை அழித்து கடினமாக்குகின்றன.
உப்பு சோதனை : வேகவைத்த பனீரில் சிறிது உப்பைத் தூவவும். அது நீலமாக மாறினால், அதில் ஸ்டார்ச் உள்ளது.
அயோடின் சோதனை : பனீரை சிறிதளவு எடுத்து தண்ணீரில் சுமார் 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து ஒரு தட்டில் வைக்கவும். ஆறிய பிறகு மேலே சில துளிகள் அயோடின் சேர்க்கவும். இப்போது பனீரின் நிறம் நீலமாக மாறினால், பாலில் செயற்கைப் பொருட்களைச் சேர்த்து பனீர் தயாரிக்கப்பட்டுள்ளது.
துவரம் பருப்பு பயன்பாடு : முதலில் ஒரு துண்டு பனீரை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பின்னர் அடுப்பை அனைத்த பிறகு, பனீர் இருக்கும் பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் துவரம் பருப்பை சேர்த்து 10 நிமிடம் வைக்கவும். பனீரின் நிறம் வெளிர் சிவப்பு நிறமாக இருந்தால், அதில் யூரியா இருக்கலாம்.
லேபில் சரிபார்ப்பு : எப்போதும் லேபிளை கவனமாக படிக்கவும். உண்மையான பனீர் பால் மற்றும் அமிலம் (வினிகர் போன்றவை) பொருட்களை மட்டுமே பட்டியலிட வேண்டும். அனலாக் பனீரில் பொதுவாக தாவர எண்ணெய் மற்றும் ஸ்டார்ச் இருக்கும்.
Read more ; நெல்லையில் மருத்துவ கழிவு கொட்ட வந்த லாரி பறிமுதல்.. மேலும் ஒருவர் கைது..!!