செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் ரூ.50 லட்சம் பெறுவது எப்படி..? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்..? பெற்றோர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!
செல்வ மகள் சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட திட்டமாகும். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடியால் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண் குழந்தைகளின் சேமிப்புகளுக்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கணக்கை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் அஞ்சல் அல்லது வங்கிகளில் பணம் செலுத்தி தொடங்கிக் கொள்ளலாம்.
பெண்ணுக்கு திருமணமாகும் வரை பணத்தை செலுத்த முடியம். அதிகபட்சம் 1.5 லட்சம் வரை வருடம் வைப்பு தொகையாக செலுத்த முடியும். ஆண்டுக்கு 1.25 லட்சம் செலுத்தினால் அதாவது மாதம் 10,000 வரை செலுத்தினால் 21 ஆண்டுகளுக்கு பிறகு 50 லட்சம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். இந்த சேமிப்பு தொகைக்கு வருமான விலக்கு பெற முடியும்.
பெண்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து குறைந்த சேமிப்பு.. ஆனால் நிறைய வருமானம் வரும் வகையில் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தில் நிறைய வட்டி மூலம் கிடைப்பதால் பெற்றோர்கள் பலரும் இதை விரும்புகின்றனர். இதனால் அதிக அளவில் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். குழந்தைகள் 10 வயதுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் பெயரில் இத்திட்டத்தை தொடங்கிக் கொள்ளலாம்.
பெண் குழந்தைகள் வயது 10-ஐ கடந்ததும் அவர்களின் பெயருக்கே இத்திட்டத்தை மாற்றிக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்ய முடியும். 2 ஆயிரம் ரூபாய் முதலீடும் செய்ய முடியும். இத்திட்டத்திற்கு 8 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது. கூடுதல் கூட்டு வட்டியும், கிடைக்கும்.