For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாய் துர்நாற்றம் உடனடியாக சரியாக வேண்டுமா.! இதை பண்ணுங்க போதும்.!?

06:38 AM Feb 07, 2024 IST | 1newsnationuser5
வாய் துர்நாற்றம் உடனடியாக சரியாக வேண்டுமா   இதை பண்ணுங்க போதும்
Advertisement

பொதுவாக உடலில் மோசமான வாசனை வீசுவது பலருக்கும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். உடலில் ஏற்படும் துர்நாற்றத்திற்கு காரணம் அதிகப்படியான வியர்வை வெளியேறுவது தான். இதே போல் வாய் துர்நாற்றமும் நமக்கும், நம்முடன் பேசுபவர்களுக்கும் அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்து வருகின்றன.

Advertisement

மேலும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பல் துலக்க வேண்டும். ஆனால் ஒரு சிலருக்கு வாய் துர்நாற்ற பிரச்சனை, வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான அமிலசுரப்பினாலும், வயிற்றுப் புண்களினாலும் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினையை எவ்வாறு சரி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்?

இதற்கு முதல் காரணமாக கூறப்பட்டு வருவது பற்களில் சொத்தை, ஈறுகளில் வீக்கம், வாய்ப்புண், அல்சர், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏதாவது இருந்தால் வாய் துர்நாற்றம் வீசும். இப்பிரச்சனை இருப்பவர்கள் முறையாக மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் இவ்வாறு உடலில் தண்ணீர் பற்றாக்குறையினால் நாக்கு வறட்சியடைந்து வாய் துர்நாற்றம் ஏற்படும். மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கங்களினாளும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். தினமும் இருவேளைகளிலும் பல் துலக்கிய பின்பு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வைத்து ஆயில் புல்லிங் பண்ண வேண்டும். ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்த பிறகு சுத்தமான தண்ணீரை கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும். இது போன்ற செயல்முறைகளின் மூலம் வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.

Tags :
Advertisement