காலாவதியான கேஸ் சிலிண்டரை கண்டுபிடிப்பது எப்படி..? அசால்ட்டா இருக்காதீங்க..!! பெரிய ஆபத்து..!!
இந்தியாவில் மட்டுமில்லாமல், பெரும்பாலான நாடுகளில் எல்.பி.ஜி வாயு இரும்பு சிலிண்டரில் அடைத்து தான் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரும்பு உருளைகளில் ஆயுட்காலம் என்பது பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை மட்டுமே. ஆனால் இதுகுறித்து பல எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோக நிறுவனங்கள் வாடிக்கையாளர் களுக்கு எதுவும் கூறுவது கிடையாது.
அதற்கு பதிலாக பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள கலாவதியான கேஸ் சிலிண்டர்களை, கேஸ் நிறுவனங்கள் மீண்டும் எல்.பி.ஜி. வாயுவை நிரப்பில் விற்பனை செய்து வருகின்றன. இதனால் எல்.பி.ஜி. வாயு கசிந்து பெரும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் காலாவதியான சிலிண்டர்களை பற்றி தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். சிலிண்டரில் நீங்கள் ரெகுலேட்டர் மாட்டும் இடத்தில், மூன்று கம்பிகள் இருக்கும். அதில் ஒரு கம்பியின் உட்புறத்தில் காலாவதியாகும் மாதம் ஆங்கிலத்திலும் ஆண்டு எண்ணிலும் பொறிக்கப்பட்டு இருக்கும்.
அதன்படி, மாதங்கள் அனைத்தும் A, B, C, D என்று ஆங்கில எழுத்துகளில் கொடுக்கப்பட்டு இருக்கும். முதல் காலாண்டின் மார்ச் மாதம் என்றால் A, இரண்டாவது காலாண்டு ஜூன் மாதம் என்றால் B, மூன்றாவது காலாண்டு செப்டம்பர் மாதம் என்றால் C, நான்காவது காலாண்டில் டிசம்பர் மாதம் என்றால் D என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.
உதாரணத்திற்கு ஏ-16 என்று சிலிண்டரில் பொறிக்கப்பட்டிருந்தால் மார்ச்-2016 என்பதை குறிக்கிறது. இதை வைத்து காலாவதியான சிலிண்டரை கண்டுபிடித்துவிடலாம். அதேபோல காலாவதியாகப் போகும் சிலிண்டருக்கு வரக்கூடிய ஆண்டுகளின் கடைசி இலக்க எண்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
Read More : ”தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு தனி பட்ஜெட்”..!! அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்..!!