ஆதார் அட்டையை இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி..? ரொம்ப ஈசியான வழி இதோ..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும்.
ஒரிஜினல் ஆதார் கார்டு கையில் இல்லாவிட்டாலும் ஆன்லைன் மூலமாக டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆதார் தொடர்பான அப்டேட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in அல்லது eaadhaar.uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்லலாம். ஆன்லைன் மூலம் ஆதார் கார்டு டவுன்லோட் செய்ய முதலில் மேற்கண்ட இணையதள பக்கத்திற்குச் சென்று முதல் பக்கத்தில் உள்ள my aadhar என்ற ஆப்ஷனில் download aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் உங்களின் ஆதார் எண் அல்லது பதிவு ஐடியை உள்ளிட வேண்டும். உங்களின் முழு பெயர், பின் குறியீடு மற்றும் பக்கத்தில் காட்டப்படும் விவரங்களை உள்ளிட வேண்டும். அடுத்ததாக get one time password என்பதை கிளிக் செய்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி நம்பரை உள்ளிட்டு டவுன்லோட் ஆதார் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது உங்களின் ஆதார் அட்டை PDF வடிவில் பதிவிறக்கம் செய்யப்படும். இதனை திறப்பதற்கு உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்களை மற்றும் உங்களின் பிறந்த ஆண்டு ஆகியவற்றின் கலவையான உள்ளிட வேண்டும்.
Read More : பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,000 பணமா..? வேட்டி-சேலையும் உண்டு..!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!!