For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண்களே.! 45 வயதை தாண்டிவிட்டதா.? இறுதி மாதவிடாயை எப்படி எதிர்கொள்ளலாம்.? மருத்துவர்களின் அறிவுரை.!

06:52 AM Feb 14, 2024 IST | 1newsnationuser5
பெண்களே   45 வயதை தாண்டிவிட்டதா   இறுதி மாதவிடாயை எப்படி எதிர்கொள்ளலாம்   மருத்துவர்களின் அறிவுரை
Advertisement

பொதுவாக ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்படுவது மிகவும் சாதாரண ஒன்றுதான். 13 வயதை தாண்டிய பெண் குழந்தை பருவமடைந்து முதன்முதலாக மாதவிடாய் ஏற்படுவதில் இருந்து 45 வயதை தாண்டிய பெண்கள் இறுதியாக மாதவிடாயை ஏற்படுவது வரை பெண்களுக்கு இது ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. மேலும் இதனால் ஹார்மோன் பிரச்சனைகளாலும், பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement

இவ்வாறு இறுதியாக மாதவிடாய் நிற்க போகும் சமயத்தில் உடல் அளவிலும், மனதளவிலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். அவை என்னென்ன என்பதை குறித்து இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்? மாதவிடாய் நிற்கும் காலத்தை, மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய காலம், மாதவிடாய் நிற்கும் காலம், மாதவிடாய் நின்றதற்கு பிறகு வரும் காலம் என மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

1. மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய காலம் என்பது பெண்ணின் கருப்பையில் இருந்து ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் வருவது குறைந்து விடுகிறது. கருமுட்டையும் வளர்வது குறைகிறது. இந்த காலகட்டத்தில் மாதவிடாய் சரியாக வராது. இதனால் பெண்களின் உடல் பாகங்கள் சிவந்து உடலில் அதிக அளவு சூடு உருவாகும். மேலும் தூக்கமின்மை களைப்பு, படபடப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.

2. மாதவிடாய் நிற்கும் காலம் - பெண்களுக்கு 45 முதல் 50 வயது ஆகும்போது மாதவிடாய் நிற்கும் காலத்தை அடைந்து விடுகின்றனர். தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிடாய் வரவில்லை என்றால் மெனோபாஸ் என்ற மாதவிடாய் நிற்கும் காலத்தை அடைந்து விட்டனர். மேலும் பெண்களின் கருப்பையில் இருந்து கருமுட்டை வெளியாகுவது நின்று விட்டது என்று அர்த்தமாகும். பிறப்புறுப்பில் அரிப்பு, தூக்கமின்மை, சிறுநீர் போகும் போது எரிச்சல், வறட்சி, போன்ற தொல்லைகள் இதனால் ஏற்படும்.

3. மாதவிடாய் நின்ற பிறகு வரும் காலம் - பொதுவாக மாதவிடாய் 45 வயதில் நின்ற பிறகு 5 முதல் 10 வருடங்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள், உடலில் பல்வேறு நோய்த்தாக்குதல்கள், கர்ப்பப்பை கீழே இறங்குதல், கர்ப்பப்பையில் கட்டி, பிறப்புறுப்பு சுருங்குவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இதற்கு சிகிச்சை முறைகளாக பெரிதும் எதுவும் தேவைப்படுவதில்லை. ஆனால் முறையான உடற்பயிற்சி, யோகா, மசாஜ், தியானம் போன்றவற்றை செய்து வருவதன் மூலம் மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் ஹார்மோன் பிரச்சனைகளை சரி செய்யலாம். தூக்கமின்மை பிரச்சனை அதிகரித்தால் மருத்துவரை சந்தித்து முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

Tags :
Advertisement