கண்களில் இந்த பாதிப்புகள் உள்ளதா.! வீட்டிலேயே எளிதாக எப்படி சரி செய்யலாம்.!?
பொதுவாக உடல் உறுப்புகளில் கண்கள் இந்த உலகத்தை பார்ப்பதற்கு மிக முக்கியமான உறுப்பாக இருந்து வருகிறது. இத்தகைய முக்கியமான உறுப்பான கண்ணில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதுதான் நல்லது. ஆனால் கண்ணில் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே எளிதாக ஒரு சில செயல்முறைகளை செய்வதன் மூலம் குணப்படுத்தலாம். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?
இமைகளில் வலி ஏற்படுவது - அதிகமான வேலைப்பளு காரணமாகவும், தூக்கமின்மை நீண்ட நேரம் மொபைல் மற்றும் லேப்டாப் போன்றவற்றை பார்ப்பதன் காரணமாகவும் இந்த வலி ஏற்படும். இதற்கு தேவையான அளவு நன்றாக தூங்க வேண்டும். இதோடு அன்றாட உணவில் கீரைகள், ஒமேகா 3 கொழுப்பு சத்து நிறைந்த மீன்கள், முட்டைக்கோஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்களில் தெரியும் திடீர் வெளிச்சம் - அதிகமாக வேலை செய்து மன அழுத்தத்தில் இருக்கும் போது நம் மூளை குழப்பம் அடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்புகிறது. அந்த நேரத்தில் தான் நமக்கு திடீரென்று வெளிச்சமும், புள்ளிகளும் தெரிவது போல் தோன்றுகிறது. இதற்கு அதிகமாக காபி, டீ போன்றவற்றை குடிப்பது யோகா, தியானம் போன்றவற்றை செய்வதன் மூலம் இவற்றை கட்டுப்படுத்தலாம்.
கண்கள் உலர்வது - ஏசி அறைகளில் அதிகமாக நேரத்தை செலவிடும்போது கண்கள் தண்ணீர் இல்லாமல் உலர்ந்து விடும். இதற்கு அடிக்கடி வெயிலில் செல்வது, நன்றாக தூங்குவது, தூரத்தில் தெரியும் பொருட்களை அதிகமாக பார்ப்பது போன்ற உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
கண்களில் அரிப்பு மற்றும் அழுத்தம் - அதிகமான தூசி நிறைந்த இடங்களில் வேலை செய்யும் போது அல்லது தூக்கமின்மையின் காரணமாகவும், கண்களில் அரிப்பு மற்றும் அழுத்தம் ஏற்படும். இதற்கு 8 மணி நேர தூக்கமும் சுத்தமான நீரில் கண்களை கழுவுவது கண்களுக்கு பயிற்சி கொடுப்பது போன்ற செயல்கள் செய்வதன் மூலம் இந்த பிரச்சனை சரியாகும்.