For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டம் 2.0' யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - முழு விவரம் இதோ

How to apply for free gas cylinder and stove under Ujjwala 2.0 scheme for women? You can see what the conditions are in this post
05:03 PM Sep 15, 2024 IST | Mari Thangam
 மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டம் 2 0  யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்    முழு விவரம் இதோ
Advertisement

இல்லத்தரசிகளின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், வளமான வாழ்வுக்காகவும், மத்திய அரசு கொண்டுவந்த சிறப்பான திட்டம்தான், உஜ்வாலா யோஜனா 2.0 திட்டமாகும்.. இந்த திட்டத்தின் வேறு பலன்கள் என்னென்ன? எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

2016ல் இந்த திட்டம் பிரதமர் மோடியால் துவங்கப்பட்டது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த திட்டத்திற்காக, புதிய பயனாளிக்கு ரூ.1,600 நிதியுதவியும் இந்த திட்டத்தில் தரப்படுகிறது. கேஸ் சிலிண்டரை நிரப்பி கொள்வது அல்லது எல்பிஜி அடுப்பு பெற்றுக் கொள்வது போன்றவற்றையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது?

www.pmuy.gov.in என்ற வெப்சைட்டிற்குள் சென்று, உஜ்வாலா 2.0 திட்டத்தின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பிறகு, பெயர், முகவரி, ஜன்தன் கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விண்ணப்படிவத்தில் பூர்த்தி செய்து, அடையாள ஆவணங்களையும் அப்லோடு செய்தால் போதும். உங்கள் விண்ணப்பங்களை அதிகாரிகள் பரிசீலித்து தகுதியானவர்களுக்கு சிலிண்டர்களை வழங்குவார்கள்.

தேவையான ஆவணங்கள்: இதற்கு நகராட்சி தலைவர் (நகர்ப்புற பகுதி) அல்லது பஞ்சாயத்து தலைவர் (கிராமப்புற பகுதி) வழங்கிய வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கான சான்றிதழ், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் நம்பர், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஜாதி சான்றிதழ், முகவரி சான்றிதழ், விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம், ஜன் தன் வங்கிக் கணக்கு அல்லது வங்கி பாஸ்புக் போன்றவை கட்டாயம் தேவைப்படும்.

யாரெல்லாம் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்?

பட்டியல் வகுப்பு/பழங்குடி குடும்பங்கள், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம், அந்த்யோத்யா அன்ன யோஜனா, காட்டு வாசிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை மற்றும் முன்னாள் தேயிலை தோட்ட பழங்குடியினர், நதியோர தீவுகளில் வசிக்கும் மக்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் கீழுள்ளவர்களும் இந்த திட்டத்தில் பலன் பெற முடியும்.வ்

தகுதிகள் என்னென்ன? இந்திய பிரஜையாக, வறுமை கோட்டுக்கு கீழுள்ள பெண்கள் விண்ணப்பிக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். சமையல் சிலிண்டர் இணைப்பு எதுவும் இதுவரை பெற்றிருக்கக்கூடாது.

Read more ; அப்பா கைய பிடிக்கனும்னு ஆசைய இருக்கு..!! அந்த சிரிப்பு.. இன்னும் மறக்க முடியல!! – தேம்பி தேம்பி அழுத விஜய பிரபாகரன்

Tags :
Advertisement