முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஒருநாளைக்கு எவ்வளவு நேரம் தூங்கவேண்டும், பணி செய்யவேண்டும்?… ஐசிஎம்ஆர் பரிந்துரை!

07:42 AM May 12, 2024 IST | Kokila
Advertisement

ICMR: ஒரு நபர் நாள் ஒன்றுக்கு எட்டு மணிநேரம் தூக்கம் மற்றும் பணிபுரிய வேண்டும் என்று ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ளது.

Advertisement

பொதுவாக தூக்கமின்மை என்பது பல்வேறு காரணங்களால் ஏற்பட்டாலும் இதுவும் ஒரு நோயாக உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 30 சதவீதம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு வெளியான ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன.

மாறி வரும் வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்ப இரவு நேர வேலை, பணி சுமைகள் ஆகியவை இந்தியாவில் பெரும்பாலான மக்களின் தூக்கத்தை பாதிக்கும் காரணியாக மாறி உள்ளது. மனித மூளை சரிவரச் செயல்பட நாளொன்றுக்கு ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியமானதாகக் கருதப்படுகிறது. காலையில் எழுந்ததும் வாக்கிங் அல்லது உடற்பயிற்சிகளை மேற்கொள்வது இரவு நன்றாக தூங்க உதவக்கூடும்.

இந்தியாவில் நோய் வாய்ப்பட்டவர்களில் 56 சதவீதம் பேர் ஆரோக்கியமற்ற டயட்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆண்டுகள் கழித்து ஐசிஎம்ஆர் விதிமுறைகளை திருத்தியமைத்துள்ளது. 148 பக்கங்கள் கொண்ட 17 விதிகளை ஐசிஎம்ஆர் வகுத்துள்ளது. அதில் ஒரு நபர் நாள் ஒன்றுக்கு எட்டு மணிநேரம் தூக்கம் மற்றும் பணிபுரிய வேண்டும் என்று ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ளது.

இதேபோல், குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் மிதமான செயல்பாட்டை செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.பெரியவர்கள் வாரத்தில் குறைந்தது 5 நாட்களில் ஒரு நாளைக்கு 30 - 60 நிமிடங்கள் வரை மிதமான - தீவிர ஏரோபி உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

Readmore: வயிற்றுப் புற்றுநோயைக் கண்டறியும் மவுத்வாஷ்!… எவ்வாறு உதவுகிறது?

Advertisement
Next Article