TN Exit Poll Result 2024: 'தமிழ்நாட்டில் யாருக்கு எவ்வளவு இடம்..!' அதிமுக, பாஜக எவ்வளவு வாக்குகள் பெறும்? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் எந்தெந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் என்பதை பார்க்கலாம்.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட நாடு முழவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 72.02 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக இன்று வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலை தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
ஏபிபி - சி வோட்டர் எடுத்த கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டில் 37 முதல் 39 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 0 முதல் 1 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெறும் என ABP-Cvoter கணித்துள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 46.3 சதவிகித வாக்குகளை இந்தியா கூட்டணி பெறும் என்றும் 21 சதவிகித வாக்குகளை அதிமுக கூட்டணி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 18.9 சதவிகித வாக்குகள் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு 13.8 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளதால் தேசிய அளவில் இதன் முடிவுகள் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
Read more ; Lok Sabha Election 2024: தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு நன்றி: தேர்தல் ஆணையம்..!