பயிர் காப்பீடு செய்தால் ஏக்கருக்கு எவ்வளவு ரூபாய் வழங்கப்படும் தெரியுமா...? முழு விவரம்
பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் காரீப் பருவ பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட காப்பீட்டு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கடன்பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பெயரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறும் மற்றும் கடன்பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ, விவசாயிகள் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம்,கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் நடப்பு வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல்,சிட்டா நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
ஏக்கருக்கு அதிகப்பட்ச மக்காச்சோளத்திற்கு ரூ.26188/-, இழப்பீடாக நெற்பயிருக்கு 5.37084/-, நிலக்கடலைக்கு ரூ.21290/-. பருத்திக்கு ரூ.12680/-, சோளம் பயிருக்கு ரூ.9795/-, இராகிக்கு ரூ.11395/-, மற்றும் துவரை ரூ.15393/-, ம் வழங்கப்படும். அதே போல் நெல்-I, சோளம், நிலக்கடலை, பயிர்களுக்கு 2024-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதியும், மக்காச்சோளம் இராகி பயிருக்கு 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதியும், துவரை பயிருக்கு 2024-ம் ஆண்டு செப்டம்பர் 16 ம் தேதியும், மற்றும் பருத்தி பயிருக்கு 2024-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதியும், பயிர் காப்பீடு செய்ய இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி காப்பீடு பிரீமியம் கட்டணமாக நெற்பயிருக்கு ரூ.742/-, சோளம், ரூ.196/- மக்காச்சோளத்திற்கு ரூ.524/-, துவரை ரூ.308/- நிலக்கடலைக்கு ரூ.426/-, பருத்திக்கு ரூ.508/-, மற்றும் இராகிக்கு ரூ.228/-, பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.