ரயில் மீது கற்களை வீசுபவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?
பெரும்பாலான மக்கள் பேருந்து, விமானம், டாக்ஸி போன்றவற்றை விட ரயில் பயணத்தை அதிகமாக விரும்புகின்றனர். அதற்குக் காரணம், ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு. அதோடு, வேகமாகவும் சௌகரியமாகவும் பயணிக்கலாம். ரயில்களில் பயணிக்கும் மக்கள் பெரும்பாலும் ரயில்வே விதிமுறைகளைப் பின்பற்றியும், மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமலும் பயணிக்கின்றனர். ஆனால் ஒரு சில பயணிகள் தேவையற்ற செயல்களை ரயில்களில் செய்கின்றனர். அது சக பயணிகளுக்கு தொந்தரவாகவும் ஆபத்தாகவும் முடிகிறது.
அதே சமயம் ஓடும் ரயிலில் கற்கள் வீசும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றனர். இதனால் இரயில் பயணிகளுக்கு காயம் ஏற்படுகிறது. அவ்வாறு செய்பவர்களுக்கு என்ன தண்டனை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ரயில்வே சட்டத்தின் பிரிவு 152 மற்றும் 153-ன் கீழ், ரயிலில் கற்களை வீசும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இது தவிர, ரயில்வே சட்டத்தில் பல பிரிவுகள் உள்ளன, அதன் கீழ் ரயில்வே சொத்து தொடர்பான குற்றங்களில் தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடு உள்ளது. ரயில்வே சட்டத்தின் 166 (பி) பிரிவின் கீழ், ரயிலில் பில் ஒட்டினால், ஆறு மாத சிறைத் தண்டனை அல்லது ரூ. 500 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இது தவிர, ரயில்வே சட்டம் 141வது பிரிவின் கீழ், செயின் இழுப்பதில் சிக்கினால், ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
ரயில்வே சட்டத்தின் 174வது பிரிவின் கீழ், ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கும், ரயில் குழாய்களை சேதப்படுத்தினாலும், சிக்னலை சேதப்படுத்தினாலும், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். ரயில்வே சட்டத்தின் பிரிவு 146 மற்றும் 147 இன் கீழ், ரயில்வே ஊழியர்களின் பணியைத் தடுத்தல், சட்டவிரோதமாக ரயில்வே அல்லது அதன் எந்தப் பகுதிக்குள் நுழைந்தால், ஆறு மாத சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
Read more ; அக்ரிமெண்ட் திருமணம்.. அடிக்கடி உல்லாசம்.. பாலியல் சுற்றுலா மையமாக மாறிய நகரம்..!! – பின்னணி என்ன?