முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சேதமடைந்த பயிர்கள், கால்நடைகள், படகுகளுக்கான நிவாரணத் தொகை எவ்வளவு..? முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

04:34 PM Dec 09, 2023 IST | 1newsnationuser6
Advertisement

மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement

-- அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சத்தில் இருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

-- சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கனவே வழங்கப்படும் தொகை ரூ.5 ஆயிரத்தினை, ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

-- பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

-- மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500இல் இருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்

-- மழையினால் பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7.410இல் இருந்து ரூ.8,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

-- எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழந்திருந்தால், ரூ.30,000இல் இருந்து ரூ.37,500 உயர்த்தி வழங்கப்படும்.

-- வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புக்கு ரூ.3,000இல் இருந்து ரூ.4,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.

-- முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட) ரூ.50,000, பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 15,000 வழங்கப்படும்.

-- முழுமையாக சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.50 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

-- சேதமடைந்த வலைகளுக்கு ரூபாய் 15,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tags :
சென்னைநிவாரணத் தொகை அறிவிப்புபுயல் வெள்ளம்மிக்ஜாம் புயல்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Advertisement
Next Article