For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மதுவிலக்கு துறைக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு..? என்ன செய்யப்படுகிறது..? பரபரப்பு தகவல்..!!

4 crores have been earmarked for awareness about the ill effects of alcohol in the financial year 2023-24.
10:13 AM Jun 21, 2024 IST | Chella
மதுவிலக்கு துறைக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு    என்ன செய்யப்படுகிறது    பரபரப்பு தகவல்
Advertisement

2023-24ஆம் நிதியாண்டில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுக்காக 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கடந்த 2024 ஏப்ரல் மாதத்துடன் முழுவதும் செலவழிக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி, மதுவிலக்கு எஸ்.பி-க்கு 15 லட்சம் ரூபாயும், ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 38 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

Advertisement

ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மூலம் நாட்டுப்புற கலைஞர்களைக் கொண்டு மதுவின் தீமைகள் குறித்து நாடகங்கள் மூலமும், டிஜிட்டல் திரைகள் மூலம் விளக்கியும் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அடிக்கடி கள்ளச்சாராய விபத்துக்கள் நடைபெறும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிக அளவில் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? இதற்கு கிடைத்த பலன் என்ன? என்பதை அரசுதான் விளக்க வேண்டும்.

Read More : விஜய்யின் காலில் விழ சொன்ன தவெக நிர்வாகி..!! தீயாய் பரவும் வீடியோ..!! உண்மை என்ன..?

Tags :
Advertisement