For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? - ராகுல் காந்தியை விளாசிய மோடி!

04:07 PM May 08, 2024 IST | Mari Thangam
அம்பானி  அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது    ராகுல் காந்தியை விளாசிய மோடி
Advertisement

தேர்தல் தேதி அறிவித்த உடன் அம்பானி, அதானியை விமர்சிப்பதை காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி நிறுத்திவிட்டார். அவர்களிடம் எவ்வளவு நிதி பெற்றீர்கள் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement

தெலுங்கானாவின் கரீம் நகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், நாடே முதன்மை என்ற நோக்கத்தில் பா.ஜ., பணியாற்றி வருகிறது. ஆனால், காங்கிரசும், பிஆர்எஸ் கட்சியும் குடும்பமே முக்கியம் என்ற கொள்கை அடிப்படையில் பணியாற்றுகின்றன. குடும்பத்தினால், குடும்பத்தினருக்காக, குடும்பத்தினரே இயக்கும் கட்சியாக இந்த இரு கட்சிகளும் செயல் படுகிறது என விமர்சித்தார்.

மேலும், ஐந்தாண்டுகளாக காங்கிரசின் இளவரசர் ஒரு முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். அதாவது ஐந்து தொழிலதிபர்கள், ஐந்து தொழிலதிபர்கள், ஐந்து தொழிலதிபர்கள் என்று. ரஃபேல் விவகாரம் அடியோடு முடங்கியதும் இந்த புதிய முழக்கத்தை அவர் தொடங்கினார். படிப்படியாக, அம்பானி-அதானி என்று சொல்லத் தொடங்கினார். ஆனால் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து. , அவர் அம்பானி மற்றும் அதானியை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டார்.

அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்பதை அவர் அறிவிக்க வேண்டும்?. உங்களுக்குள் டீல் முடிந்துவிட்டதா?. அம்பானியையும் அதானியையும் அசிங்கப்படுத்துவதை ஒரே இரவில் ஏன் நிறுத்தினீர்கள்?. இதில் ஏதோ தவறாக உள்ளது. ஐந்து ஆண்டுகளாக நீங்கள் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்தீர்கள், பின்னர் அது ஒரே இரவில் நிறுத்தப்பட்டது ஏன்?" என்று பிரதமர் மோடி கேள்விகளை எழுப்பினார்.

Tags :
Advertisement