முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”எத்தனை முறை தான் சொல்றது”..!! ”அந்த கேள்வியை இனி என்கிட்ட கேட்காதீங்க”..!! செய்தியாளர் கேள்விக்கு டென்ஷனான ரஜினி..!!

When Rajinikanth was asked about the political situation in Tamil Nadu, he said that he had already told him not to ask political questions.
08:57 AM Jan 07, 2025 IST | Chella
Advertisement

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர், தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இப்படத்தின் முக்கிய காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட உள்ளது. இதில், பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார்.

Advertisement

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கூலி படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்துள்ளது. வரும் 13ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை படப்பிடிப்பு உள்ளது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ரஜினியிடம் தமிழக அரசியல் சூழல் குறித்து கேள்வி எழுப்பியபோது, அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என்று ஏற்கனவே சொல்லிருக்கேன்... நன்றி" என்று கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.

ரஜினிகாந்த் அரசியல் குறித்து அவ்வப்போது கூறும் கருத்துக்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வந்தது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அரசியலுக்கு வருவதாகவும், கட்சி தொடங்க உள்ளதாகவும் அறிவித்த ரஜினி, கடந்த தேர்தல் தொடங்குவதற்கு முன்பு தனது உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பின்பு, ரஜினிகாந்த் அரசியல் தொடர்பான எந்தவொரு கேள்விக்கும் பதில் அளிப்பதைத் தவிர்த்து வருகிறார்.

Read More : ’நீங்க நேக்கா வெளிய போய்டுங்க’..!! ’நீதான்யா உண்மையான விசுவாசி’..!! போஸ்டரில் ஆளுநர், எடப்பாடியை வெச்சி செய்த திமுக..!! ட்ரெண்ட் ஆகும் #GetoutRavi..!!

Tags :
கூலி திரைப்படம்சட்டமன்ற தேர்தல்சென்னைரஜினிகாந்த்லோகேஷ் கனகராஜ்
Advertisement
Next Article