விஜயகாந்துடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்..? இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா..?
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சகோதரர்கள் மதுரையில் வசிப்பது பலருக்கும் தெரியும். ஆனால், அவர்கள் என்ன தொழில் செய்து வருகிறார்கள் என்ற விவரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விஜயகாந்துடன் பிறந்தவர்கள் 6 சகோதரர்கள், 5 சகோதரிகள் என மொத்தம் 11 பேர். விஜயகாந்தின் மூத்த அண்ணன் பெயர் நாகராஜ். அடுத்தது 2-வது பிள்ளையாக விஜயராஜ் என்ற விஜயகாந்த். இவருக்கு அடுத்தப்படியாக தான் செல்வராஜ், ராம்ராஜ், பிரித்விராஜ், விஜயலட்சுமி, சித்ரா, திருமலாதேவி, சாந்தி என வரிசையாக பிறந்தார்கள்.
தற்போது செல்வராஜும், பால்ராஜும் மட்டுமே மதுரையில் வசித்து வருகின்றனர். மற்ற சகோதர சகோதரிகள் எல்லாம் சென்னை, தேனி, ஒசூர் என வெவ்வேறு ஊர்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். விஜயகாந்த் தந்தை கட்டிய மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆண்டாள் பவனம் இல்லத்தில் விஜயகாந்தின் தம்பிகளான செல்வராஜூம், பால்ராஜும் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இதில் செல்வராஜ் சிறிய குழந்தைகள் விளையாடும் பிளாஸ்டிக் பேட், பால்களை மொத்தமாக வடமாநில வியாபாரிகளிடம் வாங்கி மதுரையில் சப்ளை செய்து வியாபாரம் செய்து வருகிறார்.
அரசியலில் பிஸியாக ஆவதற்கு முன்னர் வரை மதுரை செல்லும் போதெல்லாம் தனது பூர்விக வீட்டுக்குச் சென்று தம்பி குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்திருக்கிறார் விஜயகாந்த். அரசியல் கட்சி ஆரம்பித்து சட்டமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் ஆனதற்கு பிறகு தான் பூர்விக வீட்டுக்கு செல்வதை குறைத்திருக்கிறார் விஜயகாந்த். ஆனாலும் தனது சகோதரர், சகோதரிகளின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை அவர் செய்து வந்திருக்கிறார்.
இதற்கிடையே, அண்ணனை எதற்கு தொந்தரவு செய்ய வேண்டும் என நினைத்த அவரது சகோதரர்கள் விஜயகாந்திடம் உதவி கேட்பதை ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொண்டனர். அவரவருக்கு ஏற்ற தொழில்களை கவனித்து வருகின்றனர். மதுரை மேலமாசி வீதியில் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் விஜயகாந்தின் பூர்விக இல்லம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.