முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சாமி கயிறுகளை எத்தனை நாட்கள் வரை கையில் கட்டியிருக்கலாம்..? பக்தர்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

In general, we all want to live happily and with peace of mind.
07:30 AM Sep 26, 2024 IST | Chella
Advertisement

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறோம். அந்த வகையில், இந்து சமய சாஸ்திரத்தில் கயிறு கட்டுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அப்படி கோயிலில் இருந்து பெறும் கயிறை பக்தர்கள் நம்பிக்கையுடன் கட்டுவார்கள். அப்படி கட்டப்பட்ட கயிறு வருடக் கணக்கில் கையில் இருக்கும். ஆனால், இந்த கயிற்றின் சக்தி குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும். அறியாமையால் சிலர் கோவிலில் கொடுக்கப்படும் கயிறை அல்லது மந்திரிக்கப்பட்ட கயிறை நிறம் மாறி அதுவே அறுந்து விழும் அளவிற்கு கட்டுவார்கள்.

Advertisement

சாஸ்திரங்களின் அடிப்படையில் கோயிலில் இருந்து பெறப்படும் கயிறாக இருந்தாலும், மந்திரிக்கப்பட்ட கயிறாக இருந்தாலும் 21 நாட்களுக்கு மட்டுமே இதில் சக்தி இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, கைகளில் பாதுகாப்புக்காகவோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ கட்டியிருக்கும் கயிறை 21 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியது அவசியம். அப்போது மாத்திரமே அதன் பயனை முழுமையாக பெற முடியும்.

கையில் கட்டியிருக்கும் கயிறு 21 நாட்களுக்கு முன்னரே தானாக அவிழ்ந்துவிட்டாலும் அதன் சக்தி போய்விடும் மீண்டும் அதே கயிறை கட்ட கூடாது. ஆண்கள் கயிற்றை வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்ட வேண்டும் என்றே இந்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும், கையில் இருந்து கழற்றும் கயிறை ஆறு அல்லது நதி போன்றவற்றில் வீசுவதே மங்களகரமானதாக கூறப்படுகிறது.

Read More : ’இதை கட்டாயம் கடைபிடிக்கணும்’..!! தவெக மாநாட்டிற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய காவல்துறை..!!

Tags :
21 நாட்கள்சக்திசாமி கயிறு
Advertisement
Next Article