For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

RBI தகவல் ; ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கு வச்சிருக்கீங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க..

07:40 PM May 03, 2024 IST | Mari Thangam
rbi தகவல்   ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கு வச்சிருக்கீங்களா  அப்போ இத தெரிஞ்சுக்கோங்க
Advertisement

ஒருவர் எத்தனை வங்கி கணக்குகளை வைத்திருக்கலாம் என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள விதிமுறை என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

நமது நாட்டில் பெரும்பாலானோர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பர். இதற்கு முக்கிய காரணமாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த பிறகு மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் பொழுது அந்த நிறுவனத்திற்கு விருப்பமான வங்கியில் கணக்கு தொடங்க அவசியப்படலாம்.

மேலும் குடும்பம், முதலீடு மற்றும் வணிகத்திற்காக தனித்தனி வங்கிக் கணக்குகள் வைத்திருப்பது நமது நாட்டில் வழக்கமானதே.. எனவே பல வங்கிக் கணக்குகள் வைத்திருப்பதற்கு பல காரணங்களும் உள்ளன. ஆனால் நுட்பமான கேள்வி இதுதான்.. ஒரு மனிதன் அல்லது ஒரு குடும்பத்திற்கு வாழ்வில் எத்தனை வங்கி கணக்குகள் போதுமானது?

மக்கள் பலருக்கு, ஒருவர் எத்தனை வங்கி கணக்குகளை வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த சந்தேகங்கள் எழலாம். இதற்கு ஆர்பிஐ கூறும் பதில் என்ன தெரியுமா? ஒருவர், எத்தனை வங்கி கணக்குகளை வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாமாம். இவ்வளவுதான் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற தனிப்பட்ட வரம்புகள் எதுவும் கிடையாது.

ஒரு சிலர், தான் படிக்கும் காலங்களில் வங்கி கணக்குகளை தொடங்கியிருப்பர். அந்த நேரங்களில் அவர்களின் கணக்கு சேமிப்பு கணக்கு போல மட்டுமே செயல்படும். அதில் அரசு கொடுக்கும் சலுகைகள், பெற்றோர் பணம் செலுத்துதல் போன்ற பரிவர்த்தனைகள் நடைபெறும். எப்போதாவது, பணத்தை எடுக்கும் சூழ்நிலை உருவாகலாம். வேலைக்கு சென்ற பின்பு, சம்பளத்திற்காக இரண்டு அல்லது மூன்று கணக்குகளை தொடங்கி இருக்கலாம். நமது தேவைக்காக, ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை தாெடங்குவது சகஜமானதாக இருந்தாலும், அதை பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விடுவதால், கண்டிப்பாக அந்த வங்கி கணக்கு நம் கையை விட்டு நழுவி போக வாய்ப்பிருக்கிறது.

எத்தனை வங்கி கணக்கை தொடங்கினாலும் அதை சரியான முறையில் கையாண்டு, பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு, ஃப்ரீஸ் ஆகாமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும். அது மட்டுமன்றி, நாம் பயன்படுத்தாமல் விட்டு விடும் வங்கி கணக்குகள் மூலமாக பல்வேறு மோசடிகளும் நடக்கலாம் என ஆர்பிஐ எச்சரிக்கிறது. எதிர்காலத்தில் பிரச்சனைகள் எழாமல் இருப்பதற்கு, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், உங்கள் கணக்கை பயன்படுத்தி வேறு ஒருவர் மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் எழும் சட்ட பிரச்சனைகளை நீங்கள் தீர்க்க வேண்டிய சூழலும் உருவாகலாம். எனவே, ஒரு வங்கி கணக்கை தொடங்கினால் அதை சரிவர கவனிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என கூறுகிறது ஆர்பிஐ.

அதிக வங்கி கணக்குகளை வைத்திருப்பதால் எழும் பிரச்சனைகள்:

அனைத்து வங்கி கணக்குகளிலும் குறிப்பிட்ட அளவு தொகையை மினிமம் பேலன்ஸ் ஆக வைத்திருக்க வேண்டும் என்பது வங்கிகளின் கோட்பாடாகும்.

2 வருடங்களுக்கு மேலாக அந்த கணக்கு செயல்படவில்லை என்றால் ஆர்பிஐ விதிமுறைகளின் படி, அந்த கணக்கு முடக்கப்பட்டுவிடும். அதை மீண்டும் செயல்படுத்த பெனாலிட்டி தொகை கட்ட வேண்டி வரலாம். எனவே, இதை தவிர்க்க, குறைவான அளவு வங்கி கணக்குகளை வைத்து கொள்ளலாம்

Tags :
Advertisement