முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மனைவியை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள்..? நான் ஞாயிற்றுக்கிழமை வேலை பார்ப்பதால் நீங்களும் பார்க்க வேண்டும்..!! சர்ச்சை கருத்து..!!

L&T Chairman S.N. Subramanian's statement that employees should work 90 hours a week has sparked strong opposition.
08:31 AM Jan 10, 2025 IST | Chella
Advertisement

வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று L&T தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Advertisement

இதுகுறித்து அவர் பேசுகையில், “ஞாயிற்றுக்கிழமைகளில் எனது நிறுவன ஊழியர்களை வேலை வாங்க முடியாமல் போனதற்கு இப்போது வருந்துகிறேன். ஞாயிற்றுக்கிழமை ஊழியர்களை வேலை செய்ய வைத்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனென்றால், ஞாயிற்றுக்கிழமை நான் வேலை செய்கிறேன். நீங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்?

உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள்..? அதற்கு பதில், அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்கலாமே. என்னுடைய சீன நண்பர் ஒருவர், ’சீனாவால் அமெரிக்காவை வெல்ல முடியும். காரணம், சீனர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்வதாகவும், அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்வதாகவும்’ கூறினார். அப்படியானால், நீங்கள் உலகின் உச்சத்தில் இருக்க வேண்டும் என்றால், வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

L&T தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் கருத்துக்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ”மிகப்பெரிய பொறுப்புகளில் உள்ள நபர்கள் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது அதிர்ச்சியளிக்கிறது. அதோடு, Mental Health Matters.” என்ற ஹேஷ்டேக்கை அவர் பதிவிட்டுள்ளார்.

Read More : பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா..? சிறப்பு ரயில்கள் இயக்கம்..!! முன்பதிவு தொடங்கியாச்சு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
90 மணி நேரம் வேலைL&T தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன்மனைவி
Advertisement
Next Article