For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Kalki 2898 AD படம் எப்படி இருக்கு..? கேமியோ ரோலில் பிரபாஸ்..!! அமிதாப் பச்சன் மாஸ்..!! அது சுத்தமா செட் ஆகல..!! ரசிகர்கள் கருத்து..!!

Fans who have watched the first look of Kalki 2898AD have posted their reviews on X site.
09:35 AM Jun 27, 2024 IST | Chella
kalki 2898 ad படம் எப்படி இருக்கு    கேமியோ ரோலில் பிரபாஸ்     அமிதாப் பச்சன் மாஸ்     அது சுத்தமா செட் ஆகல     ரசிகர்கள் கருத்து
Advertisement

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் கல்கி. இப்படத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே மற்றும் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பாகுபலிக்கு நிகராக பிரபாஸ் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படம் இதுவாகும்.

Advertisement

கல்கி 2898AD திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக தயாராகியுள்ளது. இப்படத்தில் நானி, விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

அதாவது, கல்கி 2898AD ஓகே-வாக உள்ளது. அமிதாப் பச்சன் மாஸ் காட்டி இருக்கிறார். பிரபாஸுக்கு கேமியோ கதாபாத்திரம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. புஜ்ஜி கதாபாத்திரம் நகைச்சுவையாக உள்ளது. கமலின் நடிப்பு மற்றும் சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை நன்றாக உள்ளது. முதல்பாதி ஆவரேஜாகவும், 2ஆம் பாதி பாதி அதைவிட நன்றாகவும் உள்ளது. ஆனால், படத்தின் நீளம் அதிகம். இண்டர்வெல் காட்சி சூப்பர். கிளைமாக்ஸ் மற்றும் இரண்டாம் பாகத்துக்கான லீடு வேறலெவலில் இருக்கிறது. எமோஷனல் கனெக்ட் சுத்தமாக இல்லை. படத்தின் ஐடியா மற்றும் பிரம்மாண்ட மேக்கிங்கிற்காக ஒரு முறை பார்க்கலாம்” என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

Read More : 5G அலைக்கற்றை ஏலம் | ரூ.11,340 கோடி வருவாய் ஈட்டியது இந்தியா!!

Tags :
Advertisement