For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’மருத்துவர் பாலாஜி எப்படி இருக்கிறார்’..? ’நோயாளியுடன் வருவோருக்கு டேக்’..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!!

The affected doctor, Balaji, is now doing well. We met him this morning. He speaks well. Balaji, who is in the intensive care unit, will be shifted to a private room.
12:43 PM Nov 14, 2024 IST | Chella
’மருத்துவர் பாலாஜி எப்படி இருக்கிறார்’    ’நோயாளியுடன் வருவோருக்கு டேக்’     அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி
Advertisement

சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று கத்தியால் குத்தினார். இதில், காயமடைந்த மருத்துவர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை கண்டித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியும் தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இந்நிலையில், மருத்துவரை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், ”பாதிக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி தற்போது நலமுடன் உள்ளார். இன்று காலை அவரை சந்தித்தோம். நன்றாக பேசுகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பாலாஜி தனியறைக்கு மாற்றப்பட இருக்கிறார். தாக்குதல் நடத்திய விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.

அவர்மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாலாஜிக்கு பொருத்தப்பட்ட பேஸ்மேக்கரின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறித்து கூட்டு தணிக்கை நடத்தப்படும். நோயாளியுடன் வருவோருக்கு டேக் பயன்பாடு சோதனை முறை நடைமுறையில் உள்ளது” என தெரிவித்தார்.

Read More : ”உனக்கு வேலை ரெடி பண்ணி தர்றேன் வீட்டுக்கு வா”..!! இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து பலாத்காரம் செய்த பேராசிரியர்..?

Tags :
Advertisement