முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அமரன் படம் எப்படி இருக்கு? படம் பார்த்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் கூறிய விமர்சனம் இதோ..

How is Amaran movie? Here is CM Stalin's review after watching the film..
12:40 PM Oct 31, 2024 IST | Mari Thangam
Advertisement

ராணுவத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம்தான் அமரன். முகுந்தாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் நிலையில், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்து இருக்கிறார். ராஜ் குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து இருக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது.

Advertisement

சிவகார்த்திகேயனின் 21ஆவது படமாக உருவான அமரன் தமிழ் உள்பட தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இன்று திரைக்கு வந்துள்ளது. அமரன் எப்படி இருக்கிறது என்று பார்த்தால், விறுவிறுப்பாகவும் ஆக்‌ஷனுக்கு பஞ்சமில்லாமலும் சொல்ல வந்த கதையை ரசிகர்களுக்கு தெளிவாகவும், விளக்கமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இதுவரையில் யாருமே எதிர்மறையாக விமர்சனம் கொடுக்கவில்லை. அந்தளவிற்கு படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜிவி பிரகாஷ் ஆகியோர் திரையரங்கில் அமரன் படம் பார்த்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: நண்பர் கலைஞானி கமல் ஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன்.

புத்தகங்களைப் போல் - திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது! தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜன் - திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்! நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும் - நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் Big Salute என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more ; மையோனைஸ்க்கு ஓராண்டிற்கு தடை..!! – தெலுங்கானா அரசு அதிரடி உத்தரவு.. என்ன காரணம் தெரியுமா?

Tags :
Amaran moviecm stalin
Advertisement
Next Article