’சட்டவிரோத மது விற்பனைக்கு எப்படி அனுமதி தர்றீங்க’..? உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி..!!
சட்டவிரோத மது விற்பனையை காவல்துறையினர் எப்படி அனுமதிக்கின்றனர் என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாரயத்தை அருந்தியதில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சட்டவிரோத மது விற்பனையை காவல்துறையினர் எப்படி அனுமதிக்கின்றனர் என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், காவல்துறை அலட்சியத்தால்தான் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மது விற்பனை செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு துணைபோன காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை தேவை என்றும் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். சட்டவிரோத மதுவிற்பனை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில், சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக மனுவில், உயிரிழந்தவர்களின் உடல்களை நேர்மையாக பரிசோதனை செய்ய உத்தரவிடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Read More : கள்ளச்சாராய விவகாரம்..!! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி..!! அண்ணாமலை அறிவிப்பு..!!