ஈரானின் ராக்கெட்களை தடுத்தது எப்படி?… வீடியோ வெளிட்ட இஸ்ரேல் ராணுவம்!
israel - iran war video: ஈரானால் ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை இடைமறித்த வீடியோவை இஸ்ரேல் ராணுவம் பகிர்ந்துள்ளது.
சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகம் கடந்த 1-ம் தேதி தாக்கப்பட்டது. இதில் தூதரகத்தில் இருந்த ஈரான் ராணுவத்தைச் சேர்ந்த 2 முக்கிய தளபதிகள் உள்பட 7 பேர், சிரியாவைச் சேர்ந்த 4 பேர், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் என 12 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டுகிறது. ஆனால், ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை. எனினும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என பரவலாக நம்பப்படுகிறது. தூதரக தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டி உள்ள ஈரான், பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்ததுடன், இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதலை நடத்தியது. ஈரான் நாட்டில் இருந்து ஏவப்பட்ட இந்த ஆயுதங்களில் கிட்டத்தட்ட அனைத்தையும் இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஏவிய ட்ரோன்கள், ஏவுகணைகளை 99 சதவீதம் இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. சுமார் 170 ட்ரோன்கள், 30 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஈரானால் ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது .
இஸ்ரேலின் பல அடுக்கு ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளின் ஒரு பகுதியாகும் மற்றும் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குறுகிய தூர ராக்கெட்டுகளை இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிடம் பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்கொள்ள அரோ மற்றும் நடுத்தர தூர ராக்கெட் அல்லது ஏவுகணை தாக்குதல்களுக்கு டேவிட் ஸ்லிங் போன்ற பிற ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளும் உள்ளன.
Readmore: School: கோடை வெப்ப தாக்கம்… ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!