For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வியாபாரி முதல் சப்-இன்ஸ்பெக்டர் வரை.. 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி!! - சிக்கியது எப்படி?

How did Kalyani Rani, who cheated and married 50 people including DSP and financier through matrimonial, get caught? Sensational information has been released.
10:27 AM Jul 07, 2024 IST | Mari Thangam
வியாபாரி முதல் சப் இன்ஸ்பெக்டர் வரை   50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி     சிக்கியது எப்படி
Advertisement

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தாராபுரம் உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் கால்நடை தீவனம் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் முடிக்க பெண் கிடைக்காததால் இவரது உறவினர்கள் தீவிரமாக திருமணத்திற்கு பெண் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் ‘அம்பி டேட் தி தமிழ் வே’ என்ற இன்டர்நெட் செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சந்தியா (30) என்பவர் அவருக்கு அறிமுகமானார். பின்னர் இவர்கள் இருவரும் பழநி அருகே உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். வாலிபரின் பெற்றோரும் அந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டனர்

Advertisement

இதனைத் தொடர்ந்து சத்யாவுக்கு தேவையான நகை மற்றும் புடவைகளை வாங்கிக் கொடுத்து மகேஷ் அரவிந்த் பெற்றோர் நன்றாக பார்த்துக் கொண்டனர். திருமணம் ஆகி இரண்டு நாட்கள் குடும்பம் நடத்திய நிலையில் சத்யாவின் பெற்றோரிடம் பேசி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று மகேஷ் அரவிந்தின் பெற்றோர் முடிவு செய்தனர்.

பிறகு கொடுமுடிச் சென்று சத்தியா பற்றி அவர்கள் விசாரித்த போது சத்யா பல ஆண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை திருமணம் செய்து கொண்டதும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் சத்யாவிடம் விசாரித்த போது கோபமடைந்த அவர் மிரட்டியுள்ளார். இதனால் உஷாரான அவர்கள் சமாதானம் செய்வது போல நைசாக பேசி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சத்யாவை அழைத்துச் சென்றனர்.

அங்கு விசாரித்த போது பத்து ஆண்டுகளுக்கு முன்பே சென்னையை சேர்ந்த அருண், கரூரை சேர்ந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் என்பவரை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து குடும்பம் நடத்தியதும், கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்த மாட்டு வியாபாரி ராஜமாணிக்கத்தின் மகன் பிரகாஷ் என்பவரையும் ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவந்தது. அது மட்டுமல்லாமல் கடந்த 2012 ஆம் ஆண்டு ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டதில் சத்யாவுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதும் இவருடைய திருமணத்திற்கு தமிழ்ச்செல்வி என்பவர் புரோக்கராக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யாவை கைது செய்துள்ளனர்.

Tags :
Advertisement