முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Aranmanai 4 Twitter Review ; அரண்மனை 4 எப்படி இருக்கு..  நம்பி போலாமா? - Twitter Review விமர்சனம் இங்கே!

02:14 PM May 03, 2024 IST | Mari Thangam
Advertisement

சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

Advertisement

சுந்தர் சி இயக்கிய அரண்மனை முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் அடுத்தடுத்து அரண்மனை 2, அரண்மனை 3 என மொத்தம் மூன்று பாகங்களை இயக்கினார் சுந்தர் சி. ஆனால் இந்த இரண்டு பாகங்களும் எதிர்பார்த்தளவிற்கு வெற்றிப் பெறவில்லை. இதனையடுத்து அரண்மனை 4 வெளியான போது, “மீண்டும் மீண்டுமா” என சுந்தர் சி-யை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

இந்த பரபரப்புகளையெல்லாம் கடந்து இன்று வெளியான அரண்மனை 4 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அரண்மனை 4 திரைப்படத்தை அவ்னி நிறுவனம் சார்பில் குஷ்பு மற்றும் சுந்தர் சி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. இப்படத்தின் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

அரண்மனை 4 படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக இருக்கிறது. இதில் அதிக திகில் காட்சிகளும் கம்மியான காமெடி காட்சிகளும் அடங்கி இருக்கின்றன. விஎப் எக்ஸ் மற்றும் விஷுவல் அருமையாக உள்ளது. காமெடி காட்சிகள் ஆங்காங்கே ஒர்க் அவுட் ஆகி உள்ளது. மற்ற டெம்பிளேட் கான்செப்டுகளை ஒப்பிடுகையில் இதில் வரும் பாக் கான்செப்ட் விறுவிறுப்பாக இருக்கிறது. ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. தமன்னா மற்றும் சுந்தர் சி காம்போ சூப்பர் என பதிவிட்டுள்ளார்.

அரண்மனை 4 காஞ்சனா சீரிஸ் போன்று கிரிஞ்சாக இருக்கிறது. இதன் ஒரே ஒரு பிளஸ் தமன்னா தான், ராஷி கண்ணா டீசண்டாக நடித்துள்ளார். இறுதியில் அம்மன் பாடலில் சிம்ரன் கேமியோ நன்றாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார். இதுதவிர இப்படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என்றும் ஏராளமானோர் ட்வீட் செய்து வருகின்றனர்.

இதுவரை ஒரே டெம்ப்ளேட்டாக இருந்த அரண்மனை படத்தின் கதை, இந்த படத்தில் சற்று மாறியிருக்கிறது. இந்த படத்தில், ‘பாக்’ என்ற புதிய பேய் குறித்து கூறியிருக்கின்றனர். அதனால், இது புதிதாக இருப்பதாக ஒரு ரசிகர் தெரிவித்திருக்கிறார்.  அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், படத்தின் கதை மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகளை பாராட்டியிருக்கிறார். மேலும், பிற படங்களை போல அல்லாமல், பாக் படத்தின் கான்செப்ட் புதுமையாக இருப்பதாக அந்த ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார்.

அரண்மனை படத்தின் முதல் பாதியை பார்த்த ஒரு ரசிகர், படத்தின் த்ரில்லர் காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். படத்தின் திரைக்கதை நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதாகவூம் சில நகைச்சுவை காட்சிகள் ஓரளவிற்கு நன்றாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Tags :
aranmanai 4twitter review
Advertisement
Next Article