முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இல்லத்தரசிகளே!. சர்க்கரை விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு!. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

06:00 AM Jun 16, 2024 IST | Kokila
Advertisement

Sugar: சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை (MSP) 35% உயர்த்தி ஒரு கிலோ ரூ.42 ஆக உயர்த்த கோரிக்கை வந்ததையடுத்து, விலையை உயர்த்த மத்திய அரசு முன்வந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக அமைந்திருக்கும் வேளையில், இந்த ஆட்சியில் மிக முக்கியமான வாக்குறுதியாக இருப்பது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது தான். இதேவேளையில் இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு எத்தனால் கலப்பை அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறது, இதற்குச் சர்க்கரை உற்பத்தி உயர்த்துவது மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இந்த நிலையில் இவ்விரண்டையும் இணைக்கும் வகையில் தற்போது NFCSF அமைப்பு சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை (MSP) 35% உயர்த்தி ஒரு கிலோ ரூ.42 ஆக உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை (MSP) என்பது 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இது கடைசியாக 2019 பிப்ரவரியில் ஒரு கிலோவுக்கு ரூ.31 ஆகத் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், சர்க்கரை விலைகள் குறைந்தபட்ச ஆதார விலையை விட அதிகமாகவே உள்ளன.

மகாராஷ்டிராவில் ஆலைகளில் இருந்து வெளிவரும் சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.36 ஆக உள்ளது, அதே சமயம் சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ரூ.42-44 வரையில் விற்கப்பட்டு வருகிறது. "கரும்பின் நியாயமான மற்றும் லாபகரமான விலை (FRP) ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உயர்ந்து வருவதால், சர்க்கரையின் குறைந்தபட்ச ஆதார விலையைக் குறைந்தபட்சம் ரூ.42/கிலோ உயர்த்துமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளோம்" என்று NFCSF தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, NFCSF ஏற்கனவே மத்திய அரசிடம் தனது கோரிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இந்தநிலையில், விலையை உயர்த்த மத்திய அரசு முன்வந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே பங்கின் விலை உயர்வதாகவும் கூறப்படுகிறது.

Readmore: மக்களே சமைக்கும்போது உஷார்..!! உயிரைப் பறிக்கும் அபாயம்..!! எச்சரிக்கும் ICMR..!!

Tags :
central government decidedIncreasesugar price
Advertisement
Next Article