இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!! இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! ஒரே நாளில் ரூ.320 உயர்வு..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே இறங்குமுகத்தில் உள்ளது. அந்த வகையில், தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. நவம்பர் மாத தொடக்கம் முதலே முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே இறங்குமுகத்தில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 3) உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,130-க்கு விற்பனையாகிறது.
இன்று ஒரு சவரன் ரூ.320 அதிகரித்து ரூ.57,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமின்றி ஒரு ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கும் , ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Read More : கலைஞர் வீடு கட்டும் திட்டம்..!! யாரெல்லாம் தகுதியானவர்கள்..? எவ்வளவு பணம் கிடைக்கும்..?