முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திடீரென பூமிக்குள் புதைந்த 30 வீடுகள்..!! சாலைகள் கடும் சேதம்..!! அச்சத்தில் ஜம்மு காஷ்மீர்..!!

10:42 AM Apr 27, 2024 IST | Chella
Advertisement

ராம்பன் பகுதியில் திடீரென நிலப்பகுதி மூழ்கியதில் 31 வீடுகள் வரை சேதமடைந்து விட்டன. பயிர்களும் சேதமடைந்து விட்டன.

Advertisement

ஜம்மு காஷ்மீரில் ராம்பன் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் பெர்நோட் என்ற கிராமத்தில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென நிலப்பகுதி மூழ்க தொடங்கியுள்ளது. இதனால், சாலைகள் சேதமடைந்தன. 30 முதல் 40 வீடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அடுத்தடுத்து விரிசல்கள் காணப்பட்டன. இந்த விரிசலானது தொடர்ந்து கொண்டிருந்தது என பொறியியல் அந்தஸ்திலான அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில இடங்களில் 10 முதல் 12 மீட்டர்கள் வரை சாலைகளும் மூழ்கின. இது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மறுசீரமைப்பு பணியை மேற்கொள்ள முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினர். நிலப்பகுதி மூழ்கியதில் பயிர்களும் பாதிப்படைந்துள்ளதாக அந்த கிராமத்தினர் கூறியுள்ளனர். அந்த கிராமத்தில் வசித்து வரும் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான கலாஷா தேவி கூறுகையில், இரவு 7 மணியளவில், சாலைகளில் முதலில் வெடிப்புகள் ஏற்பட்டன.

இரவு 10 முதல் 11 மணி வரையில் ஓரடி வரை சாலை மூழ்கியது. எங்கள் கண் முன்னாலேயே இது நடந்தது. இதில், 31 வீடுகள் வரை சேதமடைந்து விட்டன. பயிர்களும் சேதமடைந்து விட்டன என வருத்தத்துடன் கூறினார்.

Read More : ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு..!! வந்தாச்சு புதிய உத்தரவு..!! மாணவர்களே ரெடியா..?

Advertisement
Next Article