"எப்புட்றா, வயித்துக்குள்ள போச்சு இது..!" அதிர்ச்சியில் மருத்துவர்கள்.!
அமெரிக்காவைச் சார்ந்த மனிதரின் பெருங்குடலில் ஈ கண்டெடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியமான சம்பவமாக பார்க்கப்படுகிறது. அந்த ஈ அவரது பெருங்குடலில் இருந்து அகற்றப்பட்டு இருப்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தை சேர்ந்த 63 வயது நபருக்கு கோளோனோஸ்கோபி சிகிச்சையின் போது ஈ ஒன்று அவரது பெருங்குடலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஈ எவ்வாறு அவரது பெருங்குடலுக்கு சென்றது என்பது தொடர்பாக விசாரி பல்கலைக்கழக மருத்துவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த நபரிடம் இது தொடர்பாக கேட்கப்பட்டபோது இந்த சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக ஒரு நாள் முழுவதும் திரவ உணவு மட்டுமே கொண்டதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள் வாய் வழியாக அந்த ஈ சென்று இருக்கலாம் ஆனால் குடல் மற்றும் உடலில் இருக்கக்கூடிய நொதிகளை தாண்டி அந்த ஈ எவ்வாறு பெருங்குடலை முழுமையாக அடைந்தது என்பது புதிராகவே இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் வயிற்றிலேயே லாவா புழுக்கள் போன்று உருவாகவும் வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது தொடர்பாக அவருக்கு எந்தவித அறிகுறிகளோ உடல் உபாதைகளோ அவருக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிகிச்சையின் போது ஈ அவரது உடலில் இருந்து அகற்றப்பட்டிருக்கிறது. மேலும் இதை அகற்றிய பிறகும் அவருக்கு எந்தவித உடல் உபாதைகளும் ஏற்படவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த சம்பவம் மருத்துவ உலகில் ஒரு ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பான கட்டுரை ஒன்றும் மருத்துவர் களுக்கான சர்வதேச பத்திரிக்கையில் வெளியிடப்பட்டிருக்கிறது.